Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீ வைக்கப்பட்ட சர்ச்சுகள்! மபியில் பரபர சம்பவம்! உபியை சேர்ந்த 3 பேர் கைது -கலவரத்தை தூண்ட முயற்சி?

மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சவுக்கிபுரா பகுதியில் பிரசித்திபெற்ற ஒரு தேவாலயம் அமைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: மத்திய பிரதேசத்தில் இரண்டு தேவாலயங்களை அடித்து நொறுக்கி தீ வைத்த சம்பவங்களில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மசூதிகள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இரு குறிப்பிட்ட மதத்தினர் இடையே கலவரத்தை தூண்டுவதற்காக அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா என விசாரித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீக்கிரையான தேவலாலயங்கள்

தீக்கிரையான தேவலாலயங்கள்

மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சவுக்கிபுரா பகுதியில் பிரசித்திபெற்ற ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வழக்கம் போல தேவாலயத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில், தேவாலயம் முழுவதும் சூறையாடப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் இருந்தன. மேலும், தேவாலயத்தின் சுவர்களின் 'ராம்' என்ற வார்த்தையும் எழுதப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டது.

உச்சக்கட்ட பதற்றம்

உச்சக்கட்ட பதற்றம்

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதியன்று அதே மாவட்டத்தில் இட்டார்சி பகுதியில் உள்ள தேவாலயத்தையும் மர்மநபர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்திருந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் அடங்குவதற்குள்ளாக மேலும் ஒரு தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டது அங்குள்ள கிறிஸ்தவ மக்களை கொதித்தெழச் செய்தது. அதுமட்டுமல்லாமல், இரு வேறு மதத்தினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழலும் எழுந்தது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க பதற்றமான பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

 தூக்கிய போலீஸார்

தூக்கிய போலீஸார்

இதனிடையே, தேவாலயங்களை தீக்கிரையாக்கிய மர்மநபர்களை 5-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். சிசிடிவி கேமராக்கள், செல்போன் டவர்களில் பதிவான அழைப்புகள் ஆகியவற்றை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய அவ்னிஷ் பாண்டே (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அவர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

 மாஸ்டர் மைண்ட் யார்?

மாஸ்டர் மைண்ட் யார்?

அவரிடம் மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்த ஆகாஷ் திவாரி என்பவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த காரியங்களை தான் செய்ததாக அவ்னிஷ் பாண்டே தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயங்களின் இருப்பிடங்களை கூகுள் மூலம் ஆகாஷ் திவாரி, அவ்னிஷ் பாண்டேவுக்கு அனுப்பியுள்ளார். இதன்பேரில் அவ்னிஷ் பாண்டே தனது நண்பரான ஷிவ ராயுடன் சேர்ந்து அந்த தேவாலயங்களை தீக்கிரையாக்கி வந்துள்ளார். இதற்காக இவர்களுக்கு ஆகாஷ் திவாரி பணமும் அனுப்பி வைத்துள்ளார்.

கலவரத்தை தூண்டவா?

கலவரத்தை தூண்டவா?

அவ்னிஷ் பாண்டே கொடுத்த தகவலின் பேரில் ஷிவராயையும், ஆகாஷ் திவாரியையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். ஆகாஷ் திவாரியின் செல்போனில் பல மசூதிகள் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். தேவாலயங்களுக்கு பிறகு மசூதிகள் மீது தாக்குதல் நடத்தவும் அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், எதற்காக இந்த காரியத்தில் ஆகாஷ் திவாரி ஈடுபட்டார், மதக்கலவரத்தை உருவாக்க திட்டமிட்டாரா, அவருக்கு பின்னணியில் ஏதேனும் இயக்கம் இருக்கிறதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+