தொழுகைக்கு தடை செய்யனும்.. சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்கனும் - கியான்வாபி மசூதி குறித்து புதிய வழக்கு
லக்னோ: கியான்வாபி மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதித்து அங்கு கண்டெடுக்கப்பட்டு இருக்கும் சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க வேண்டும் என புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இதற்கு அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் கட்டிய கியான்வாபி மசூதி இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக பேசப்பட்டு வந்த இந்த மசூதிதான் தற்போது சர்ச்சைகளுக்கு இலக்காகி இருக்கிறது.

வாரணாசியில் வழக்கு
பாபர் மசூதி தடைக்கு பிறகு அடுத்த இலக்கு என பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியையும், மதுராவில் உள்ள ஈத்கா மசூதியையும் சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் கியான்வாபி மசூதியின் வளாகத்துடைய வெளிப்புறச் சுவற்றில் உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு ஆண்டுக்கு 5 முறை பூஜை நடத்த அனுமதி வழங்கக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் பெண்கள் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

வீடியோ ஆய்வு
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் வீடியோ ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து குழு ஒன்றையும் அமைத்தது. இதனை எதிர்த்து மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இந்தஜாமியா கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 17 ஆம் தேதிக்குள் ஆய்வை நிறைவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையிட்டது.

உச்சநீதிமன்றம் மறுப்பு
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது வழக்கு குறித்த ஆவணங்களை பார்க்காமல் கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறினர். இதனை அடுத்து 14 ஆம் தேதி மசூதியில் எதிர்ப்புகளை மீறி கள ஆய்வு தொடங்கியது.

ஆய்வு நிறைவு
இந்த ஆய்வுக்குழுவில் வழக்கறிஞர் ஆணையர் அஜய்குமார் மிஸ்ரா, சிறப்பு வழக்கறிஞர் விஷால் சிங், துணை வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங், மனுதாரர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் என 36 பேர் ஆய்வுக்காக கியான்வாபி மசூதிக்கு சென்றனர். அங்கு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

சிவலிங்கம்
3 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வில் கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக வழக்கை கடந்த சில நாட்களுக்கு முன் விசாரித்த உச்சநீதிமன்றம், மசூதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கியதுடன் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட இடத்தை பாதுகாக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த், நரசிம்மா அமர்வு வழக்கை வாரணாசி சிவில் நீதிமன்றத்திலிருந்து அனுபவம் வாய்ந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டார்.

புதிய வழக்கு
இந்த நிலையில் விஷ்வா வேதிக் சனாதன சங்கத்தின் தலைவர் ஜிதேந்திர சிங்கின் மனைவி கிரண் சிங், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், "கியான்வாபி மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதித்து, மசூதி வளாகத்தை தங்களிடம் ஒப்படைத்து, அங்கு கண்டெடுக்கப்பட்டு இருக்கும் சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க வேண்டும் என புதிய வழக்கு தொடர்ந்துள்ளார்.
Recommended Video

விரைந்து விசாரிக்க முடிவு
இதில், மசூதியில் சிவலிங்கம் என்று சொல்லப்படும் பகுதியை வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை மட்டும் நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்த வழக்கை பரிசீலித்த மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், அதை விரைந்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி கியான்வாடி - ஷ்ரிங்கர் வளாக வழக்கு வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications