லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓடும் ரயிலுக்கு கீழ் சிக்கிய 1 வயது குழந்தை.. பதறிய பெற்றோர்.. ஆச்சர்யமாக உயிர் தப்பிய வீடியோ!

உத்தர பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தை ஒன்று ஆச்சர்யமாக உயிர் பிழைத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓடும் ரயிலுக்கு கீழ் சிக்கிய 1 வயது குழந்தை, உயிர் தப்பிய வீடியோ!

    லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரயில் செல்லும் நேரத்தில், தண்டவாளத்தில் விழுந்த குழந்தை ஒன்று ஆச்சர்யமாக உயிர் பிழைத்து இருக்கிறது.

    உத்தர பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த குழந்தைக்கு 1 வயதுதான் ஆகிறது.

    இந்த குழந்தை ரயில் தண்டவாளத்தில் விழுந்ததும், ரயில் அவளுக்கு மேலாக சென்றதும் வீடியோவாக வெளியாகி உள்ளது.

    மண்டியிட்டு விழுந்தது

    மண்டியிட்டு விழுந்தது

    அந்த குழந்தை முதலில் ரயில்வே பிளாட்பாரத்தில் மண்டியிட்டு விளையாடி உள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிளாட்பாரம் விளிம்பிற்கு சென்று பின் அங்கிருந்து கீழே தண்டவாளத்தில் விழுந்துள்ளது. தண்டவாளத்திற்கும் பிளாட்பார்மிற்கும் இடையில் உள்ள பகுதியில் அந்த குழந்தை சிக்கியது.

    சரியாக ரயில் வந்தது

    சரியாக ரயில் வந்தது

    இதை பார்த்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு ஓடி இருக்கிறார்கள். ஆனால் அதற்குள் அங்கு ரயில் வந்துவிட்டது. அந்த குழந்தைக்கு மேலாக அந்த ரயில் வேகமாக சென்றுள்ளது.

    ஒன்றும் ஆகவில்லை

    இதை பார்த்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் பயந்து, நடுங்கி ''ஓ'' என்று கத்தினார்கள். ஆனால் ரயில் சென்று முடிக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என்பதால், ரயில் செல்லும் வரை எல்லோரும் காத்திருக்க வேண்டிய நிலை ஆகிவிட்டது. இந்த நிலையில் ரயில் சென்ற பின் அந்த குழந்தையை தூக்கினார்கள்.

    ஆச்சர்யம்

    ஆச்சர்யம்

    இந்த விபத்தில் அந்த குழந்தை அதிசயமாக உயிர் தப்பியது. அந்த குழந்தைக்கு இந்த விபத்தில் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இந்த ஆச்சர்யமான சம்பவத்தை அடுத்து அந்த குழந்தையை அங்கிருந்த எல்லோரும் தூக்கி வைத்து உற்சாகமாக கொண்டாடிக் கொண்டு இருந்தனர்.

    English summary
    One-year-old girl escapes unhurt after a train runs over her at Mathura Railway station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X