தேவையில்லாத ஆணி! உ.பியில் தனித்து களமிறங்கும் ஓவைசி! ஆசாத்தையும் இணைத்து உருவாக்கிய 3வது அணி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், AIMIM அசாதுதீன் ஓவையும், ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தும் கூட்டணி அமைத்து.. தனியாக களமிறங்க முடிவெடுத்திருக்கின்றனர்.

உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை பாஜகவை காலி செய்வதுதான் பிளான். இந்த பிளானில் இந்தியா கூட்டணியுடன் நிற்காமல் இந்த கட்சிகள் தனித்து நிற்பது பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கின்றன. இதில் AIMIM கட்சி சிறுபான்மையினரையும், ஆசாத் சமாஜ் கட்சி தலித் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

Owaisi

3வது அணி!

2027ம் ஆண்டு உ.பி சட்டப்பேரவை தேர்தலுக்காக அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சியும், நாகினா தொகுதி எம்பி சந்திரசேகர் ஆசாத்தின் 'ஆசாத் சமாஜ் கட்சியும் (கன்ஷிராம்)' இணைந்து 'சமாஜிக் பரிவர்தன் மோர்ச்சா' என்கிற புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை இரு தலைவர்களும் வெளியிட்டிருக்கின்றனர்.

நாங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளர்

கூட்டணியின் தலைவராக சந்திரசேகர் ஆசாத் இருப்பார் என்றும், உ.பியில் பாஜக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வலிமையான அணியாக இந்த மோர்ச்சா செயல்படும் எனவும் ஓவைசி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். எனவே பாஜக தடுக்க.. சமாஜ்வாடி, காங்கிரஸ் அல்லது வேறு எந்த கட்சியாவது தங்களுடன் இணைய விரும்பினால் வரலாம் என்றும் ஆசாத் அழைப்பு விடுத்திருக்கிறார்.

உ.பி தேர்தல் சொல்லும் பாடம்

வெளியிலிருந்து பார்க்கும்போது.. இது பெரிய புரட்சிகர கூட்டணி போல தெரிந்தாலும், உள்ளே ஒன்றும் இல்லை. காரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலை பார்த்தால் புரியும். அப்போதும் இந்த கட்சிகள் இதேபோலத்தான் சீன் போட்டார்கள். இந்தியா கூட்டணியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவித்து தனியாக போட்டியிட்டார்கள். ஆனால், பெரிய அளவுக்கு வெற்றிப்பெறவில்லை. காரணம், பாஜகவை எதிர்க்கும் பலம் சமாஜ்வாடி+காங்கிரஸிடம்தான் இருக்கிறது என்று மக்கள் பெரிய அளவுக்கு நம்பினர்.

சமாஜ்வாடியின் வெற்றி

குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் PDM என்கிற பார்முலாவை சமாஜ்வாடி கட்சி பின்பற்றியது. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் வாக்கு வங்கிகளை குறிவைத்து தேர்தலை கட்சி சந்தித்திருந்தது. வாக்காளர்கள் பிரிப்பு தொடங்கி, எல்லா தேர்தல் நடவடிக்கையிலும் சமாஜ்வாடி இந்த பார்முலாவை அமல்படுத்தியது. பொது தொகுதியான பைசாபாத் தொகுதியில், தலித் வேட்பாளரை களமிறக்கி, வெற்றி பெற்று காட்டியது. இது பாஜகவுக்கு பெரிய ஷாக்கை கொடுத்தது.

3வது அணி! தேவையில்லாத ஆணி

மொத்தமாக கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில், உ.பியின் 80 நாடாளுமன்ற தொகுதிகளில் 43 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று அசத்தியிருந்தது. மறுபுறம் தனியாக போட்டியிட்டிருந்த ஆசாத், நாகினா தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். மறுபுறம் AIMIM கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. இப்படி இருக்கையில் இந்த முறையும் இவர்கள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருப்பது, ஃபெய்லியராகத்தான் போய் முடியும் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+