போர் விமானங்கள் இறங்கும் கங்கா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் 594 கி.மீ. நீளத்தில் அமையும் கங்கா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் பாஜக ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களுடன் களமிறங்கி உள்ளது.
பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாக உ.பி.யில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று 594 கி.மீ. நீளத்தில் அமையும் கங்கா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

உ.பி.யின் மீரட், பிரக்யாராஜ் உட்பட 12 மாவட்டங்களை இந்த நெடுஞ்சாலை இணைக்கும். 594 கி.மீ நீளத்தில் அமையும் இதுதான் நாட்டின் மிக நீளமான நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலையானது கிழக்கு உத்தரப்பிரதேசத்தை டெல்லியுடன் நேரடியாக இணைக்கும்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கங்கா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.36,230 கோடி மதிப்பீட்டில் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. போர் விமானங்கள் தரை இறங்கும் வகையில் கங்கா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை உருவாகிறது. இது ஆறுவழி நெடுஞ்சாலையாகும். ஷாஜகான்பூரில் 3.5கி.மீ தொலைவுக்கு போர் விமானங்கள் தரை இறங்கும் வகையில் விமான ஓடுபாதையும் அமைக்கப்படுகிறது.
அண்மையில் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையும், கங்கை நதி கரையையும் இணைக்கும் வகையிலான ரூ.339 கோடியில் கட்டப்பட்ட வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக உ.பி.யில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி போர் விமானத்தில் வந்து நெடுஞ்சாலையில் இறங்கியிருந்தார்.

-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்

Click it and Unblock the Notifications