அடடே.. பிரதமர் நரேந்திர மோடியின் போன் நம்பர் இது தானா? மெயில் ஐடியையும் அவரே சொல்லிட்டாரா?
லக்னோ: லோக்சபா தேர்தல் 2024ல் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் தனது தொலைபேசி எண் மற்றும் ஈ-மெயில் ஐடி குறித்த விவரங்களை பகிர்ந்துள்ள நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தல் களம் இடைவேளையை சந்தித்து தற்போது கிளைமாக்ஸ் நோக்கி பயணித்து வரும் நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற இருக்கிறது.

ஏழாவது மற்றும் இறுதி கட்டத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் களம் இறங்குகிறார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி: அவருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய கட்சியின் முக்கிய பிரமுகர்களும், தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் வேட்பு மனுவை கணேஷ்வர் சாஸ்திரி, பைஜ்நாத் படேல், லால்சந்த் குஷ்வாஹா மற்றும் சஞ்சய் சோன்கர் ஆகியோர் பரிந்துரைத்தனர்.
பிரமாண பத்திரம்: தேர்தல் ஆணைய விதிப்படி பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பு கல்வி தகுதி தனிப்பட்ட விவரங்களை பிரதமர் மோடி சமர்ப்பித்து இருந்தார். அந்த தகவல்கள் தான் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் தொலைபேசி, ஈ-மெயில் ஐடி குறித்த தகவல்களை இணையத்தில் அதிகமாக தேடி வருகின்றனர் பாஜகவினர்.
தொடர்பு விவரங்கள்: இந்நிலையில் "எனது தொடர்பு தொலைபேசி எண் 8980809224 மற்றும் எனது மின்னஞ்சல் ஐடி [email protected]" என்று பிரதமர் மோடியின் பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை தெரிந்து கொள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் ட்ரூகாலர் அப்ளிகேஷனில் இந்த தொலைபேசி எண்ணை டைப் செய்து தேடியபோது பிரதமர் நரேந்திர மோடி ஜி என காட்டுகிறது.
சொத்து மதிப்பு: தொலைபேசி மற்றும் இமெயில் விவரங்களை தேர்தல் அலுவலகத்தில் இருந்து யாரும் கசிய விட்டார்களா அல்லது போலியான தகவலா என்பதை உறுதிப்படுத்தவில்லை. மேலும் பிரதமர் மோடியின் பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு ரூ. 3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ. 52,920 ரொக்கமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் எஸ்பிஐ கணக்கில் ரூ.2,85,60,338 நிரந்த வைப்புத்தொகையுடன், நான்கு தங்க மோதிரங்களுடன் ரூ.2,67,750 இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications