Plus 2 Result : முகத்தில் மீசை! கேலிக்குள்ளான உ.பி. மாணவி பிராச்சி நிகாம் பிளஸ் 2 தேர்விலும் சாதனை
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில 10ஆம் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி பிராச்சி நிகாம், முகத்தில் இருந்த தாடி, மீசைக்காக டிரோல் செய்யப்பட்ட நிலையில் தற்போது பிளஸ் 2 தேர்விலும் அவர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகாம், மீண்டும் ஒருமுறை இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தபோது, அவரது முகத்தில் மீசை, தாடி போன்று முடி இருந்ததால் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விமர்சனங்களைச் சந்தித்தார்.

ஆனால், அத்தகைய எதிர்மறை கருத்துக்களுக்குச் செவிசாய்க்காமல், தற்போது 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் 91.20% மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.
பாடவாரியான மதிப்பெண் விவரங்கள்
பிராச்சி நிகாம் அறிவியல் பாடங்களில் அபரிமிதமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்:
கணிதம்: 99/100
இந்தி: 96/100
வேதியியல்: 95/100
இயற்பியல்: 93/100
ஆங்கிலம்: 73/100
ஆங்கிலத்தில் மட்டும் மதிப்பெண் குறைந்தது குறித்துப் பேசிய அவர், தனது முழு கவனமும் JEE (ஐஐடி நுழைவுத் தேர்வு) தயாரிப்பில் இருந்ததால், ஆங்கிலப் பாடத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

முன்னாள் சர்ச்சையும் - பிராச்சியின் துணிச்சலும்
10-ஆம் வகுப்பில் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தபோது, பிராச்சியின் புகைப்படம் வைரலானது. அப்போது ஒரு சாரார் அவரது தோற்றத்தைக் கேலி செய்தனர். அந்தச் சமயத்தில் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் பிராச்சி மிக முதிர்ச்சியான பதிலைக் கொடுத்தார்:
"என் முகத்தில் முடியுடன் படைத்தது கடவுள்தான். எனக்கு அதில் பிரச்சினை இல்லை. நான் முதலிடம் பிடிக்காமல் இருந்திருந்தால் இத்தனை விமர்சனங்கள் வந்திருக்காது. பெண்கள் முகத்தில் முடி இருப்பதை மக்கள் விசித்திரமாகப் பார்க்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அதை முன் பார்த்ததில்லை. ஆனால், நான் இதைப் பற்றி கவலைப்படவில்லை. எனது இலக்கு மற்றும் படிப்பில் மட்டுமே என் கவனம் இருக்கிறது."
எதிர்காலக் கனவு
சிறுவயதிலிருந்தே ஒரு சிறந்த பொறியாளராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பிராச்சி, தற்போது ஐஐடி-யில் (IIT) சேருவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உருவத்தை விட ஒருவரின் உழைப்பும், அறிவும் தான் முக்கியம் என்பதை உலகிற்குத் தனது வெற்றியின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது என்பது ஹார்மோன் பிரச்சினையால் ஏற்படும். இதை கூடவா கிண்டல் செய்து அந்த 17 வயது சிறுமியின் மனதை நோகடிப்பது? இப்படி எதற்கெடுத்தாலும் உருவ கேலி செய்யும் சில சமூகவலைதளவாசிகளை என்ன சொல்வதென தெரியவில்லை. இவர்களது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications