அந்தரங்க உறுப்பில் காயம்.. பிரபல சாமியாரின் சீடர் சாவில் ட்விஸ்ட்.. ஆசிரமத்தில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிரபல சாமியார் பிரேமானந்த் மகாராஜ்ஜின் சீடர் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவத்தில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இறந்த சீடரின் அந்தரங்க உறுப்பில் காயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரது சாவின் பின்னணியில் வேறு கரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

premanand-maharaj-disciple-dies-after-fall-from-4th-floor-and-severe-injury-to-his-private-parts

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரை சேர்ந்தவர் தீபக் லோதி (வயது 25). இவர் பிரேமானந்த் மகாராஜ் என்ற சாமியாரிடம் சீடராக சேர்ந்தார். இதையடுத்து தீபக் லோகி தனது பெயரை ராஷிக் துலரி ஷரண் என்று மாற்றம் செய்து கொண்டார்.

அதன்பிறகு சாமியார் பிரேமானந்த் மகாராஜ் உடன உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் வரகாட் பகுதியில் கவ் கிருபாகுஞ்ச் ஆசிரமத்தில் ராஷிக் ஷரண் தங்க தொடங்கினார்.

இந்நிலையில் தான் கடந்த 25ம் தேதி காலையில் திடீரென்று ராஷிக் ஷரண் தான் வசித்து வந்த 4வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்தார். அவர் ஆசிரம கட்டத்தில் இருந்து 6 அடி தூரத்தில் செல்லும் ரோட்டில் போய் விழுந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் துடித்தார்.

இதை பார்த்ததும் மற்ற சீடர்கள் விரைந்து சென்று ராஷிக் ஷரணை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஷிக் ஷரண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவுமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அவரது அந்தரங்க உறுப்பில் காயம் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது அறையில கிரைண்டர் ரத்தக்கறையுடன் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் உள்ளது. இவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் எப்படி அவரது அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டு இருக்கும்? என்ற சந்தேகம் புரியாத புதிராக உள்ளது.

தற்கொலை செய்த ராஷிக் ஷரண் சீடராக இருக்கும் சாமியார் பிரேமானந்த் மகாராஜ் உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலம். இவருக்கு மொத்தம் 40 சீடர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவராக தான் இறந்த ராஷிக் ஷரண் இருந்தார். கடந்த 2025ம் ஆண்டு முதல் சீடராக உள்ளார். இவர் தங்கியிருந்த இடம் என்பது வாராகாட் என்பது ஆசிரமத்துக்கு பெயர் பெற்றதாகும். ஏனென்றால் இங்கு 24க்கும் அதிகமான ஆசிரமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+