இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! காங். ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் செய்வோம்.. ராகுல் காந்தி உறுதி

Subscribe to Oneindia Tamil

லக்கோ: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், டிகிரி மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு வேலைக்கான பயிற்சி வழங்கப்படும் என்றும், இந்த பயிற்சி காலத்தில் இளைஞர்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, இன்றுடன் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

Rahul Gandhi has promised to provide job training and Rs 1 lakh assistance to youth who have completed degrees and diplomas

உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கும் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள் கூட்டணியாக போட்டியிடுகின்றன. இந்நிலையில் இன்று காஜியாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி காங்கிரஸின் திட்டம் குறித்து விரிவாக விளக்கினார்.

அவர் பேசியதாவது, "கடந்த 10 ஆண்டுகளில், பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி மற்றும் அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களை ஆதரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் முறையை பிரதமர் மோடி வெட்டி குறைத்திருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்துவதே எங்கள் முதல் பணியாகும். அதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையில் 23 யோசனைகளை வழங்கியுள்ளோம்.

இதில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சியை உறுதி செய்தலும் ஒன்று. அதாவது, உத்தரப் பிரதேசத்தின் டிகிரி முடித்தவர்கள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கான பயிற்சிக்கான உரிமையை வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த காலத்தில் இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வோம். கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த உரிமையை நாங்கள் வழங்குவோம். அதேபோல அரசு தேர்வில் வினாத்தாள் கசியும் விவகாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்.

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவை இந்தத் தேர்தலில் பெரிய பிரச்சினைகளாக உள்ளன. பாஜகவும், பிரதமர் மோடியும் முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். வறுமையை ஒரேயடியாக ஒழித்துவிடுவோம் என்று யாரும் கூறவில்லை, ஆனால் அதற்காக நாங்கள் பலமான முயற்சிகளை மேற்கொள்வோம்" என்று கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில், அங்கு சட்டமன்ற தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என மாறி மாறி ஆட்சி நடந்திருந்தாலும், எந்த கட்சியும், தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில்லை. ஆனால், இந்த சாதனையை பாஜக முறியடித்திருக்கிறது. கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

எனவே, இங்கு இந்தியா கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு பெரும் கேள்விக்குறியாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+