காங்கிரஸ் வெற்றிபெற்றால்.. ராகுல்தான் பிரதமர்.. முதல்முறையாக அறிவித்தார் பிரியங்கா காந்தி!
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் கண்டிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமராக பதவி ஏற்பார் என்று காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
லக்னோ: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் கண்டிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமராக பதவி ஏற்பார் என்று காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்று அவர் காங்கிரஸ் உத்தர பிரதேச நிர்வாகிகள் இடையே பேசினார். தேர்தலில் எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

என்ன பேட்டி
பிரியங்கா காந்தி தனது பேச்சில், நாங்கள் தேர்தலுக்காக உளரவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை கொண்டு வருவோம். நாடு முழுக்க மக்கள் கடனாலும், ஏழ்மையாலும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் மோடிக்கு அது எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை.

என்ன நிலைமை
இந்த தேர்தலில் நிலைமைகள் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் வெற்றிபெற்றால் ராகுல் காந்திதான் பிரதமர். ராகுல்தான் கண்டிப்பாக பிரதமராக பதவி ஏற்பார்.

தேர்தல்
எனக்கும் தேர்தலில் நிற்க விருப்பம் இருக்கிறது. என்னை தேர்தலில் நிற்க சொன்னால் நிற்பேன். கண்டிப்பாக கட்சி சொல்லும் இடத்தில் போட்டியிடுவேன். ஆனாலும் கூட எனக்கு கட்சிக்காக உழைக்கவே அதிக விருப்பம். கட்சியை வளர்க்க வேண்டும்.

மோடி மாற்றுகிறார்
பிரதமர் மோடி மக்களை பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப பார்க்கிறார். டிஆர்டிஓ செய்த சாதனையை அரசியலாக்க பார்க்கிறார். மக்களுக்கு உண்மையாக இருக்கும் பிரச்சனைகள் தெரிய கூடாது என்று இது போன்ற விஷயங்களை அவர் பெரிதுபடுத்திக் கொண்டு இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications