அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் எப்போது முதல் தரிசிக்கலாம்? தரிசன நேரம், முன்பதிவு செய்வது எப்படி?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கோயிலில் எப்போது முதல் தரிசனம் செய்யலாம்.. தரிசன நேரம் என்ன என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதைப்பற்றி பார்க்கலாம்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கோவில் கட்டும் பணிக்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தா சேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கோவில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.

உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் கோவில் கட்டுமான பணிகள் நடந்தது. நாகரா பாணியில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக பிரமாண்டமாக அமைந்துள்ளது. கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது ஆகும். கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த பிரமாண்ட கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை உள்ளிட்டவை இன்று நண்பகல் 12.20 மணிக்கு நடைபெறுகிறது.
அயோத்தி ராமர் கோவில்: கும்பாபிஷேகத்தையொட்டி 7 நாள் பூஜைகள், சடங்குகள் கோவிலில் தொடங்கியது. கடந்த 17 ம் தேதி கோவில் கருவறையில் 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை தான் இன்று பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. கோவில் கருவறையில் உள்ள சிலைக்கு இன்று அர்ச்சகர்கள் பூஜை, சடங்குகள் செய்கின்றனர். இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கு சடங்குகள் செய்ய உள்ளார்.
பொதுமக்கள் வரவேண்டாம்: ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என சமூகத்தில் பல்வேறு தரப்பிலும் உள்ள பலருக்கும் ராமர் கோவில் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அன்று பொதுமக்கள் வரவேண்டாம் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
தரிசன நேரம் எப்போது: அதன்படி, கும்பாபிஷேக நாளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பொதுமக்கள் எப்போது முதல் ராமர் கோயிலில் தரிசனம் செயய் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விவரம் வெளியாகியிருக்கிறது. அதாவது, தரிசன நேரம் அயோத்தி பால ராமரை பக்தர்கள் நாளை முதல் தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 ஆம் தேதி முதல் காலை காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும்,
முன்பதிவு வசதி: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம். காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். இதில் கலந்து கொள்ள https://srjbtkshetra.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். தற்போது முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்படவில்லை. ஓரிரு தினங்களில் இந்த வசதி வரும் எனத் தெரிகிறது.
இதே இணையதளத்தில் பொது மக்கள் நன்கொடை அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கோயில் திறக்கப்பட்ட பிறகு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் நள்ளிரவு வரை தரிசன நேரத்தை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications