ராகுலுக்கு வந்த அதே பிரச்சனை.. மோடி பற்றி பேச்சால் சிறை! எம்எல்ஏ பதவி போன பின் நிரபராதியான ஆசம் கான்
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வெறுப்பு கருத்தை தெரிவித்ததாக கூறி குற்றவாளி என கீழ் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு எம்.எல்.ஏ. பதவியை இழந்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் ஆசம் கானை நிரபராதி என்று ராம்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவராக இருந்து வருபவர் ஆசம் கான். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக கருதப்படும் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து பேசியதாக கூறி உத்தரப்பிரதேச காவல்துறை வெறுப்பு பேச்சு வழக்கை பதிவு செய்தது.

"நம் நாட்டில் இஸ்லாமியர்கள் வாழ்வதற்கே கடினமான சூழலை பிரதமர் நரேந்திர மோடி" உருவாக்கிக் கொண்டு இருக்கிறார் என்று 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார் ஆசம் கான். இதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வெறுப்பு பேச்சு வழக்கு கீழ் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
இதற்கு மத்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு ஆசம் கான் வெற்றியும் பெற்றார். இந்த வழக்கு விசாரணை ராம்பூர் கீழ் நீதிமன்றத்தில் நடந்துகொண்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டது.
அதில், ஆசம் கான் இரு தரப்புக்கு மத்தியில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி இருப்பது உறுதிபடுத்தப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதிப்பதாகவும், அதே நேரம் ஆசம் கான் இந்த வழக்கில் ஜாமின் பெற முடியும் எனவும் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் சிறை தண்டனை பெற்றால் அவர்களின் பதவி பறிக்கப்படும். அந்த வகையில் ஆசம் கானின் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் எம்.எல்.ஏவாக இருந்த ராம்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
அந்த இடைத்தேர்தலில் ஆசம் கானுக்கு மிகவும் நெருக்கமானவரான அசீம் ராஜா என்பவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால், அவரை பாஜக வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா வீழ்த்தி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இதற்கிடையே ராம்பூர் கீழ் நீதிமன்றம் தனக்கு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ராம்பூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், ஆசன் கானை வெறுப்பு பேச்சு வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இதுகுறித்து ஆசம் கானின் வழக்கறிஞர் வினோத் சர்மா கூறுகையில், "இந்த வழக்கு எங்களுக்கு எதிராக சித்தரிக்கப்பட்டது. தற்போது எங்களுக்கு எதிராக தீர்ப்பு கிடைத்து உள்ளது" என்றார்.
இதேபோல்தான் கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகா மாநிலம் கோலாரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு குஜராத்தின் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் எம்.பி. பதவியை இழந்தார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications