தாலிபான்களின் ஆப்கான். வெற்றி.. இந்திய சுதந்திரத்தோடு ஒப்பிட்டு.. சமாஜ்வாதி எம்பி கருத்து
லக்னோ: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெற்ற வெற்றியை இந்திய சுதந்திர போராட்டத்தோடு தொடர்புபடுத்தி சமாஜ்வாதி எம்பி ஷாபிக்கர் ரஹ்மான் பார்க் சர்ச்சையாக பேசி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 வருடமாக நடந்த போரில் தாலிபான்கள் வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளது. ஆப்கான் அரசு அங்கு வீழ்ந்து, அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளது.

தாலிபான்கள் வெற்றி குறித்து இந்தியா இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்பதை மட்டுமே இந்தியா இதுவரை தெரிவித்து வருகிறது. நேற்று நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கூட இந்தியா வெளிப்படையாக தாலிபான்களை எதிர்த்தோ, ஆதரித்தோ கருத்து எதையும் தெரியவில்லை.
இந்தியாவை சேர்ந்த அரசியல் கட்சிகளும் பெரிதாக தாலிபான் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான், சமாஜ்வாதி எம்பி ஷாபிக்கர் ரஹ்மான் பார்க் தாலிபான் வெற்றி குறித்து சர்ச்சையாக பேசினார்.
அவர் தனது பேச்சில், தாலிபான்கள் தாங்கள் பிடித்த நிலங்களை மீண்டும் மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தாங்கள் இழந்த நாட்டை அவர்கள் மீண்டும் மீட்டு இருக்கிறார்கள். தங்களின் சொந்த நிலத்தையே அவர்கள் மீட்டு உள்ளனர்.
இந்தியா தனது சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடியது. அதேபோல் தாலிபான்கள் தங்களின் சுதந்திரத்திற்காக ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளை காலங்காலமாக எதிர்த்து போராடி வென்று உள்ளனர். அவர்கள் சுதந்திரம் பெற்று, சுயமாகே ஆட்சி நடத்த விரும்புகிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.
சமாஜ்வாதி எம்பி ஷாபிக்கர் ரஹ்மான் பார்க் தெரிவித்த இந்த கருத்து கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
குவைத், பஹ்ரைன் மீது சரமாரி தாக்குதள்.. ஈரானின் வெறியாட்டம்.. CENTCOM கொடுத்த பகீர் அறிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications