எம்பி ஸ்மிருதி ராணியை "காணவில்லை".. 2 வருஷங்கள்.. 2 நாட்கள்.. 2 மணி நேரம்.. அமேதியை அலறவிட்ட போஸ்டர்
லக்னோ: எம்பி ஸ்மிருதி ராணியை காணவில்லை என்று அவரது சொந்த தொகுதியிலேயே அச்சடித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. "அமேதி தொகுதி என்ன உங்களுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்டாக போய் விட்டதா?" என்றும் வாசகங்களுடன் அந்த போஸ்டர் பரபரக்கிறது!!
கடந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஸ்மிருதி ராணி... பாஜகவின் செல்வாக்கு மிக்கவர். இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார்.

பல்வேறு அதிரடிகளுக்கு மட்டுமல்லாமல், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர் ஸ்மிருதி ராணி.. இந்நிலையில், இவர் சம்பந்தமாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த போஸ்டர் பிளாக் & ஒயிட் கலரில் உள்ளது.. "அமேதி தொகுதி எம்பி ஸ்மிருதி ராணியை காணவில்லை'' என்று கொட்டை எழுத்தில் தலைப்பு போட்டு அந்த போஸ்டர்களை தொகுதி முழுக்க ஒட்டியுள்ளனர்...
மேலும், "கடந்த முறை தேர்தலில் ஜெயித்த பிறகு இந்த பக்கம் வரவே இல்லை.. இந்த 2 வருஷத்தில் 2 நாட்கள் மட்டுமே.. 2 மணி நேரம் மட்டுமே தங்கி இருந்து, அமேதியில் உங்கள் இருப்பை பதிவு செய்துவிட்டு போனீர்கள்.. அதற்கு பிறகு எங்கே சென்றீர்கள்? என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் உள்ளன.
"அமேதி தொகுதி என்ன உங்களுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்டாக போய் விட்டதா?" என்றும் வாசகங்கள் உள்ளன.. சொந்த தொகுதியிலேயே எம்பியை இப்படி கேள்விகளை கேட்டு போஸ்டர் ஒட்டியது யார் என தெரியவில்லை.. இந்த போஸ்டரை அரசியல் ரீதியாக யார் ஒட்டியிருந்தாலும், உண்மையிலேயே எம்பி தொகுதி பக்கம் வரவே இல்லை என்கிறார்கள் மக்களும்.
கொரோனா பாதித்து இவ்வளவு அவஸ்தை பட்டு வருகிறோம், ஆனால், ஸ்மிருதி ராணி இங்கே வரவேயில்லை என்று தொகுதி மக்களே மனம் நொந்து சொல்கிறார்களாம். உபி முழுக்க இந்த காணவில்லை போஸ்டரால்தான் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications