உத்தர பிரதேசத்தில் உருவாகும் புது கூட்டணி.. 2019ல் மோடிக்கு எதிராக திரளும் இருபெரும் தலைகள்!
உத்தர பிரதேச மாநிலத்தின் இரண்டு பெரிய கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி வைக்க போவது உறுதியாகி உள்ளது.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தின் இரண்டு பெரிய கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி வைக்க போவது உறுதியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக இப்போதே கட்சிகள் தயாராகி வருகிறது.
பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இப்போதே கூட்டணி குறித்து பேச தொடங்கி உள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் புதிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முக்கியமான உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. இங்கு வெற்றி பெறும் கட்சிதான் எப்போது மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். டெல்லிக்கு வழி லக்னோதான் என்று தேசிய அரசியலில் கூறும் வழக்கம் கூட உண்டு. இந்த 80 தொகுதிகளை கைப்பற்றவே அனைத்து கட்சிகளும் துடித்துக் கொண்டு இருக்கிறது.

சென்ற முறை எப்படி
சென்ற 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இந்த 80 தொகுதியில் 71 இடங்களில் வெற்றிபெற்றது. இதுதான் பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த அங்கு நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக மிக மோசமாக தோல்வியை தழுவியது.

இப்போது என்ன
உத்தர பிரதேச மாநிலத்தின் இரண்டு பெரிய கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் எப்போது கூட்டணி வைத்தாலும் அங்கு பாஜக தோல்வியை தழுவி இருக்கிறது. தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைப்பதற்கு நிகராகும் அது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய இரண்டு கட்சிகளும் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணி வைக்க போவது உறுதியாகி உள்ளது.

எத்தனை இடங்கள்
தற்போது எந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட போகிறது என்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 80 இடங்களில் கண்டிப்பாக 37 இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைக்க போவதாக தெரிகிறது. இதற்கு சமாஜ் வாதி கட்சியும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வருகிறது. இதனால் கூட்டணி குறித்து இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

காங்கிரஸ் பாஜக
இதனால் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய இரண்டு கட்சிகளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காது என்பது தெளிவாகி உள்ளது. ஆகவே இந்த கட்சிகள் எதிர்க்கட்சிகள் அமைக்கும் பெரிய கூட்டணியில் சேர போவது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு












Click it and Unblock the Notifications