Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலியுடன் உல்லாசமாக இருக்க.. மனைவிக்கு கணவர் செய்த காரியம்.. என்னன்னு பாருங்க ஆடிப்போயிருவீங்க?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் காதலிக்கும் பெண்ணைத் திருமணம் செய்வதற்காக, மனைவிக்கு செய்த காரியம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபருக்கு இரண்டு குழந்தைகள் வேறு இருக்கிறதாம்.

உத்தரப்பிரதேசத்தில் தான் தாலி கட்டி கரம் பிடித்த மனைவி உயிரோடு இருக்கும்போதே, தனது காதலியைத் திருமணம் செய்வதற்காக மனைவி இறந்துவிட்டதாக ஒருவர் நாடகம் ஆடியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் உச்சபட்சமாக மனைவிக்கு 13 வது நாள் ஈமக்காரியம் செய்து, அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.

uttar pradesh crime

உத்தரப்பிரதேச மாநிலம், கன்னுஜ் மாவட்டத்தில் உள்ள பவானி சராய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் பட்டேல். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். தன்னுடைய இரண்டு குழந்தைகளை மட்டும் பவன் பட்டேல் அழைத்துச் சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

பவன் பட்டேலுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தான் காதலிக்கும் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்வதற்காக மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் பவனின் மனைவி பூஜா தனது குழந்தைகள் இருவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டில் வாழ்வதற்காக கான்பூருக்குச் சென்றுள்ளார்.

இந்த சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பவன் பட்டேல் தனது மனைவி இறந்துவிட்டதாகக் கூறி பூஜாவுக்கு ஈமக்காரியங்களையே செய்து முடித்துள்ளார். பின்னர், தனது காதலியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் பூஜாவிடம் இருந்து இரண்டு குழந்தைகளையும் கடத்திக் கொண்டு சென்றதாக பவன் பட்டேலின் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், நான் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக பவன் அனைவரிடமும் கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ஈமச்சடங்குகளையும் செய்துள்ளார். தான் இறந்துவிட்டால் அவரது வாழ்க்கைக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாது என்று கருதி, என்னை அனாதையாக விட்டுவிட்டு எனது குழந்தையையும் கடத்திச் சென்றுவிட்டார்.

எனது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது வீட்டுக்கு ஒரு பெண்ணை கூட்டிக் கொண்டு வந்து வாழ்ந்து வந்தார். அதற்கு நான் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன் ஆனாலும் அவர் அதனை கண்டுகொள்ளவே இல்லை. இதனால்தான் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு எனது பெற்றோர் வீட்டில் சென்று வசித்து வந்தேன்.

ஆனால், நான் இறந்துவிட்டதாக கூறி எனது கணவர் 13 ஆவது நாள் காரியத்திற்கே ஏற்பாடு செய்துவிட்டார். என்னுடைய ஃபோட்டோவுக்கு மாலை அணிவித்து பொட்டு வைத்து ஈமச்சடங்குகளை செய்துள்ளார். அந்த சடங்கிற்கு பவன் பட்டேலின் உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் அழைத்துள்ளார். மேலும், அந்த சம்பவத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

நான் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு, அவர் கள்ளக்காதல் செய்யும் பெண்ணை திருமணம் செய்வதற்காக இதுபோன்று நாடகத்தை அரங்கேற்றம் செய்துள்ளார் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். பூஜா அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+