ஸ்பீடெடுக்கும் கொரோனா பரவல்.. தடுப்பு நடவடிக்கையில் உ.பி. சுகாதாரத்துறை தீவிரம்: யோகி அரசு தந்த ஐடியா
லக்னோ: கொரோனா தொற்று பரவல் வட இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், இதனை தடுக்க போதுமான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. சுமார் 40% வரை திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் நாடு முழுவதும் சுமார் 3,016 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரமாக இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில சுகாதாரத்துறையை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில்தான் உத்தரப் பிரதேச அரசு தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாசிட்டிவாக வரும் அனைத்து டெஸ்ட் சாம்பில்களையும் மரபணு வரிசைமுறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிட் தொற்றை சமாளிக்கும் அளவுக்கு மருத்துவ உபகரணங்கள், பிபிஇ கிட்கள், கையுறை, முக கவசம், மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை தேவையான அளவு கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான பிரத்யேக வார்டுகள் உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இதனை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிட் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளை தீவிரப்படுத்த சில வழிக்காட்டுதல் நெறிமுறைகளையும் யோகி ஆதித்யநாத் அரசு வழங்கியுள்ளது. இந்த பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்த நபர்களின் மாதிரியானது மரபணு வரிசைப்படுத்தலுக்கு லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட இருக்கிறது.
அனைத்து மாவட்டங்களிலும் சுவாசக்குழாய் தொற்று, இன்ஃப்ளூயன்ஸா, கடுமையான சுவாச நோய் தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கௌதம் புத்த நகரில் 57, காசியாபாத் 55, லக்கிம்பூர் கெரியில் 44, லக்னோவில் 27, பிஜ்னோரில் 12, லலித்பூர் 9 மற்றும் சஹரன்பூர் 8 என இநத மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. எனவே இம்மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த கோரோனா அலையின் போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்கள் கூறுகையில், "தற்போது மாநில அரசு பின்பற்றி வரும் யோசனை மிகச் சிறந்ததாகும். கடந்த கொரோனா அலையின் போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவனம் செலுத்துவது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போன்றது. இந்த ஐடியா நிச்சயம் தொற்று பாதிப்பை தடுத்து நிறுத்தும" என்று கூறியுள்ளனர். ஏற்கெனவெ புதிய திட்டங்கள் மூலம் உ.பி மக்களிடைய நன்மதிப்பை பெற்றுள்ள யோகி அதித்யநாத் அரசு தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications