கமல்.. கமல்.. கமல்.. மூச்சு விடாமல் 35 முறைக்கும் மேல் சொன்ன பாஜக மூத்த தலைவர்.. ஏன் தெரியுமா?
பாஜக மூத்த தலைவர் வினித் அகர்வால் சாரதா தனது பிரச்சாரத்தின் போது ''கமல், கமல்'' என்று 35 முறை தொடர்ச்சியாக சொன்னது பெரிய வைரலாகி இருக்கிறது.
Recommended Video

லக்னோ: பாஜக மூத்த தலைவர் வினித் அகர்வால் சாரதா தனது பிரச்சாரத்தின் போது ''கமல், கமல்'' என்று 35 முறை தொடர்ச்சியாக சொன்னது பெரிய வைரலாகி இருக்கிறது.
லோக்சபா தேர்தலுக்காக பாஜக கட்சி தற்போது மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பாஜக மூத்த தலைவர் வினித் அகர்வால் சாரதா நேற்று முதல்நாள் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பிரச்சாரம் செய்தார்.
பாஜக வேட்பாளர் ராஜேந்திர அகர்வாலை ஆதரித்து அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரம்தான் தற்போது இணையம் முழுக்க டிரெண்ட் அடித்து வைரலாகி இருக்கிறது.

என்ன சொன்னார்
வினித் அகர்வால் தனது பிரச்சாரத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது பிரதமர் மோடி ராமர் போல ஆட்சி செய்வார். உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் லட்சுமணன் போல ஆட்சி செய்வார். நாடே ராம் ராஜ்ஜியம் போல நிம்மதியாக சந்தோசமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
லோக்சபா தேர்தலில் இவர்களுக்குத்தான் வெற்றியா? .. டைம்ஸ் நவ் - விஎம்ஆர் சர்வே!

தொடர்ந்து
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் சின்னம் கமல் (தாமரை), அதனால் அதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இனி எப்போது கமல், கமல், கமல் மட்டும்தான் என்று குறிப்பிட்டார். அதை தொடர்ந்து 35 முறைக்கும் அதிகமாக தொடர்ந்து கமல் என்று வேகமாக பேசினார்.
|
சிரிப்பலை
கமல், கமல், தொடர்ந்து அவர் கூறிக்கொண்டே இருந்தார். இவர் இப்படி பேசியது அங்கு மக்கள் மத்தியில் சிரிப்பலையை வரவழைத்தது. இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகி இருக்கிறது. நேற்று இணையத்தில் பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து கொண்டு இருந்தனர்.

எப்படி கிண்டல்
காங்கிரஸ் கட்சியினர் பலர், வினித் ஒரு ராப் இசை கலைஞர் போல பேசுகிறார். அவர் அரசியலை விட்டுவிட்டு சினிமாவிற்கு பாட சென்றுவிடலாம் என்று கூறினார்கள். சிலர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு இந்த வீடியோவை டெடிகேட் செய்து இருக்கிறார்கள்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications