63.6% இருந்து 54.2% ! இறங்கு முகத்தில் மோடி? வாரணாசியில் பறி போன 50 ஆயிரம் வாக்குகள்!
லக்னோ: பிரதமர் மோடியின் வாக்கு சதவீதம் 63.6% இருந்து 54.2% ஆக இந்த முறை குறைந்துள்ளது. ராமர் கோயில் கட்டி சாதனை செய்த பிறகு இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் பல வழிகளில் பாஜகவுக்குப் பின்னடைவைத் தந்துள்ளது. 2019இல் என்.டி.ஏ கூட்டணி மொத்தம் 352 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்தமுறை இது 293 இடங்களைத்தான் கைப்பற்றி உள்ளது.

ஆகவே பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. ஆனால் பாஜக 240 இடங்களைத்தான் பெற்றுள்ளது.
பாஜகவுக்கு வழக்கமாக கை கொடுத்து வந்த மாநிலம் உபி. ஆனால் அங்கேயே இந்த முறை பாஜக தடுமாறியுள்ளது. 33 மூன்று இடங்களில்தான் வென்றுள்ளது.
அது மட்டுமல்ல பிரதமர் மோடியே உபியில் உள்ள வாரணாசி தொகுதியில்தான் களம் கண்டு வருகிறார். எனவே உபி பல வழிகளில் பாஜகவுக்கு முக்கியமான மாநிலமாக உள்ளது.
அங்கேதான் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அது பாஜகவின் வெற்றி சின்னமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதைச் சாதித்துக் காட்டியதற்காக இம்முறை பாஜக உபியில் அதிக இடங்களை வெல்லும் என்று பலரும் கூறிவந்தனர்,
ஆனால், அங்கே நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்த 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முதல் 3 கட்டத்தில் பிரதமர் மோடி பின்னடைவைச் சந்தித்த நிலையில் 4 ஆம் கட்டத்தில்தான் முன்னிலை பெற்றுள்ளார்.
இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் பிரதமர் மோடிக்கு 36424 வாக்குகள் கிடைத்தன. 619 வாக்குகள் அவர் முன்னிலை பெற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய்க்கு 35805 வாக்குகள் கிடைத்தது. அதன் பின்னர் 4 கட்ட எண்ணிக்கையின் போது மோடி பின்னடைவிலிருந்து முன்னிலையைப் பெற்றார்.
கடந்த மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, மொத்தம் 674,664 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தனது வெற்றியைப் பதிவு செய்தார். சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினி 195,159 வாக்குகளைப் பெற்றிருந்தார். அப்போது காங்கிரஸ் அஜய் ராய் 152,548 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்தமுறை நான் மோடியை வீழ்த்துவேன் என்று முழக்கமிட்டு களம் இறங்கினார் அஜய் ராய். 'நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்' என்று சபதம் போட்டு மோடிக்கு எதிராகப் போட்டிப் போட்டார்.
ஆனால், கிட்டத்தட்ட 152513 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவி உள்ளார்.
அது அல்ல செய்தி. கடந்த 2014இல் 581,022 வாக்குகளை மோடி வாங்கி இருந்தார். அவரது வாக்கு சதவீதம் 56.37%. அதேபோல் 2019இல் மோடி பெற்ற வாக்குகள் 674,664. கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கு மேலாக கூடுதல் வாக்குகளைப் பெற்றார். அப்போது அவரது வாக்கு சதவீதம் 63.62%.
ஆனால் இந்த 2024 தேர்தலில் மோடியின் வாக்குகள் குறைந்துள்ளன. 612,970 வாக்குகளைத்தான் அவர் பெற்றுள்ளார். இந்த முறை 54.24% தான். சுமார் 60 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளன.
எளிமையாகச் சொன்னால் வாக்கு சதவீதம் 63.6% இருந்து 54.2% ஆகவும் குறைந்துள்ளது.
அதாவது நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டதை லைவ் ஆகக் காட்டி பல கோடி மக்கள் அதைக் கண்டு தரிசித்தார்கள் என்று பாஜக ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தது. ஆனால், அந்த ராமர் பக்தர்கள் எல்லாம் இந்தமுறை எங்கே சென்றார்கள்? விழுந்த வாக்குகளையே திரும்பப் பெறமுடியாமல் போனது ஏன்?
இப்படி பல கேள்விகளை உண்டாக்கி உள்ளது மோடியின் வெற்றி!
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications