ஒரு பக்கம் காசி தமிழ் சங்கமம்.. மறுபுறம் உபி-இல் திருவள்ளுவர் சிலைக்காக 32 ஆண்டுகளாக போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இப்போது காசி தமிழ் சங்கம் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள 'பாஷாசங்கம்' திருவள்ளுவர் சிலை தொடர்பாகக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்போது காசி தமிழ் சங்கமம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே உள்ள உறவை விவரிக்கும் வகையில் இந்த தமிழ் சங்கமம் நடைபெறுகிறது.

கடந்த 19-ம் தேதி, இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சி ஒரு மாதம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பாஷாசங்கம்

பாஷாசங்கம்

இதில் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும், இதன் தொடக்க நிகழ்ச்சியில் தான் பிரதமர் மோடி 13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார். தமிழ் மொழிக்காக விழா நடந்து வரும் அதே சூழலில், சுமார் 32 ஆண்டுகளாக அங்கு அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க அங்குள்ள பாஷாசங்கம் என்ற அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு மொழிகள் இருக்கும் நிலையில், அதை அவற்றை இணைக்கும் வகையில் பாஷா சங்கம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அலகாபாத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த இயக்கம் 1976ஆம் ஆண்டு முதலே செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கம் வட மாநிலங்களில் பல இடங்களில் தமிழ் மொழி வகுப்புகள் எடுத்து வருகின்றன. இவர்கள் திருவாசகம், பெருங்கதை, வளையாபதி, குண்டலகேசி இந்தியில் மொழி பெயர்த்தும் உள்ளனர்.

திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் சிலை

துளசிதாசரின் 12 நூல்களில் இந்த அமைப்பு தமிழிலும் மொழிபெயர்த்து உள்ளது. மேலும், இந்த சங்கம் சார்பில் திருவள்ளுவர், நாமக்கல் கவிஞர், பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களுக்கு விழாக்களும் நடத்தப்படும். இந்த அமைப்பு 1990கள் முதலே அலகாபாத் சங்கமத்தின் தென்கரை சாலைக்குத் திருவள்ளுவர் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், கங்கை, யமுனை மற்றும் நம்பப்படும் சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

திரிவேணி சங்கமத்தின் தென்கரை சாலைக்குத் திருவள்ளுவர் பெயர் வைக்கவும் சிலையும் அமைக்கவும் அலகாபாத் மாநகராட்சி கடந்த 2017 ஜனவரி மாதம் அனுமதி அளித்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் சிலை அமைக்க முற்பட்ட போது, பொது இடங்களில் சிலை வைக்க நீதிமன்ற தடை உள்ளதாகக் கூறி சிலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது அலகாபாத் வளர்ச்சி ஆணையம் முதலில் அனுமதி அளித்த போதிலும், பின் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி தேவை எனச் சொல்லி சிலைக்கு அனுமதி மறுத்துவிட்டது.

கோரிக்கை

கோரிக்கை

கடந்த ஆறு ஆண்டுகளாகவே இந்த பாஷா சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர் யோகியை சந்திக்க முயன்றுள்ளனர். இருப்பினும், அவர்களால் சந்திக்கக் கூட முடியவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதியும் கூட அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கத் தர வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளார். இருப்பினும், அனுமதி கிடைத்தாக தெரியவில்லை. அங்குள்ள தனியார் ஆசிரமம் ஒன்று திருவள்ளுவர் சிலை வைக்க அனுமதித்த போதிலும், திருவள்ளுவருக்கு சமய அடையாம் வந்துவிடும் என அஞ்சி இந்த அமைப்பு அங்குச் சிலை அமைக்கவில்லை.

அனுமதி கிடைக்குமா

அனுமதி கிடைக்குமா

பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் பொது இடத்தில் சிலையை வைக்க வேண்டும் என்பதே இவர்களின் 32 ஆண்டு கோரிக்கை. இப்போது காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தி வரும் நிலையில், இப்போதாவது திருவள்ளுவர் சிலை அமைக்க அனுமதி தர வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. சுமார் 6 ஆண்டுகளாக இந்த அமைப்பு இதற்குப் போராடியும் அனுமதி கிடைக்காமல் இருக்கிறது. இதற்கு விரைந்து அனுமதி தர வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+