யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழா! ‛தி காஷ்மீர் பைல்ஸ்’ படக்குழுவுக்கு அழைப்பு
லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக லக்னோவில் இன்று 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க, 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் வென்ற இடங்களை சேர்த்தால் இது 273 தொகுதிகளாக உயரும்.
இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாலையில் பதவியேற்பு
இதற்கு முன்னோட்டமாக லக்னோவில் நேற்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத், சட்டசபை பாஜக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று காலை யோகி ஆதித்யநாத் பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்ளுடன் தேநீர் விருந்து வழங்கினார். யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழா லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்பு
இதனால் அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதில் உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் 2வது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சியினர், பிற மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

தி காஷ்மீர் பைல்ஸ் படக்குழு
இந்நிலையில் தான் யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவுக்கு இதுதவிர பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தின் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி, நடிகர் அனுபம் கெர் உள்பட திரைப்பட குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

பாஜக ஆதரவு
இந்த ‛தி காஷ்மீர் பைல்ஸ்' என்ற திரைப்படம் மார்ச் 11ல் வெளியானது. இது 1990ல் காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டித்கள் வெளியேறியதை அடிப்படையாக கொண்ட கதையம்சத்தை உள்ளடக்கி உள்ளது. இதற்கு பாஜகவின் ஆதரவு தெரிவித்து பல மாநிலங்களில் வரிவிலக்கு அளித்துள்ளனர். அதேநேரத்தில் காங்கிரஸ் உள்பட பிற எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் தான் யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவுக்கு படக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications