நடுரோட்டில் நிர்வாணம்.. திருநங்கைகள் செய்த அட்டூழியத்தை பாருங்க.. எல்லை மீறிய சம்பவம்
லக்னோ: இரு திருநங்கைகள் குழுவினர் இடையே பொதுமக்களிடம் பணம் பெறுவதில் ஏற்பட்ட பிரச்சனை போராட்டமாக மாறியது. அப்போது திருநங்கைகள் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து நிர்வாண கோலத்தில் சாலைகளில் ஓடி வாகன போக்குவரத்தை தடுத்து நிறுத்தியது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்டுத்தியது.

உத்தர பிரதேசத்தின் ஜான்சியில் திருநங்கைகள் குழுவாக இணைந்து பொதுமக்களிடம் பணம் பெறுவது வழக்கம். இந்த விஷயத்தில் திருநங்கைகளில் இரு குழுவினர் இடையே மோதல் உள்ளது. அடிக்கடி அவர்கள் மோதிக்கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.
நேற்று வழக்கம்போல் திருநங்கைகள் ஜான்சி பகுதியில் பொதுமக்களிடம் பணம் பெற்றனர். அப்போது திடீரென்று பணம் பெறும் ஏரியாக்கள் தொடர்பாக திருநங்கைகள் இடையே மோதல் ஏற்பட்டது.
திருநங்கைகள் இரு குழுவாக பிரிந்து மாறி மாறி தாக்கி கொண்டனர். அவர்கள் ஜான்சி போலீஸ் லைன் பகுதியில் ஒரு குழுவினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் திருநங்கை பப்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். போராட்டம் நடந்த இடத்தில் தான் ஜான்சி சீனியர் எஸ்பி அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு முக்கிய மீட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்த போராட்டம் நடந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வந்து திருநங்கைகளை அங்கிருந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆத்திரமடைந்த திருநங்கைகள் தங்களின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக போராட்டம் நடத்தினர்.
நிர்வாண கோலத்தில் சாலைகளில் சென்ற கார்கள் மீது ஏறி நின்றதோடு, டூவீலர்களில் செல்வோரை வழிமறித்து பிரச்சனை செய்தனர். இதனால் நிலைமை எல்லை மீறி சென்றது. இதையடுத்து வேறு வழியின்றி போலீசார் அங்கிருந்த திருநங்கைகளை கைது செய்தனர்.
திருநங்கைகளான அனுஷ்கா என்ற அபிசேக், நயன்தாரா, மம்தா, பூஜா, மகாவீரன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
