Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛அகிலேஷின் பிடிவாதம்’’.. உ.பி.யில் 3 தொகுதியால் உடையும் கூட்டணி? காங்கிரஸ்-சமாஜ்வாதி இடையே மோதல்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக மோதல் உருவாகி உள்ளது. 3 தொகுதிகளில் இருகட்சிகளும் போட்டியிட விரும்பும் நிலையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் தான் அகிலேஷ் யாதவ் பிடிவாதகமாகவும், கறாராகவும் கூறிய விஷயம் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி நிலைக்குமா? என்ற பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி உள்பட மொத்தம் 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கின.

Trouble for INDIA Alliance: Samajwadi chief Akhilesh Yadav stubborn on 3 seats and deal with Congress not finalised yet

இந்த ‛இந்தியா' கூட்டணியில் தற்போது தொடர்ந்து பிரச்சனை என்பது வந்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியின்றி தான் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க பீகார் முதல்வரும், ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் ‛இந்தியா' கூட்டணியை விட்டு விலகி பாஜகவுடன் இணைந்துள்ளார். அதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தை மையமாக வைத்து செயல்பட்டு வரும் ஆர்எல்டி எனும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி ‛இந்தியா' கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. இதனால் உத்தர பிரதேசத்தில் ‛இந்தியா' கூட்டணி என்பது காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சியாக தான் இருக்கிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் அதிக நாடாளுமன்ற தொகுதி என்பது உத்தர பிரதேசத்தில் தான் உள்ளது. இங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தற்போது அங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. மேலும் தற்போது பாஜகவுக்கு 62 எம்பிக்கள் உள்ளனர். இத்தகைய சூழலில் ஆர்எல்டி கட்சி ‛இந்தியா' கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளது சமாஜ்வாதி-காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி இடையே தொகுதி பங்கீடு என்பது இன்னும் முடியவில்லை. மாறாக இருகட்சிகள் இடையே தற்போது மோதல் தொடங்கி உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளதோடு, உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. அதாவது உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 24 தொகுதிகளை கேட்கிறது.

இதில் 11 தொகுதிகள் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதோடு அதிகபட்சமாக 17 சீட் வரை வழங்குவதாக சமாஜ்வாதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பதில் தான் தற்போது குழப்பம் ஏற்பட்டு பிரச்சனை நீடிக்கிறது.

குறிப்பாக 3 தொகுதிகளுக்கு இருகட்சிகளும் மல்லுக்கட்டுகின்றன. அதாவது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மொரடாபாத், பாலியா மற்றும் பிஜ்னூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்கிறது. ஆனால் இந்த 3 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி கொடுக்க மறுக்கிறது. குறிப்பாக அகிலேஷ் யாதவ் இந்த தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி தான் உறுதியாக போட்டியிடும் என பிடிவாதம் பிடிக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்த 3 தொகுதிகள் விவகாரத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி இடையே தற்போது மோதல் வெடித்துள்ளது. ஏனென்றால் மொரடாபாத் தொகுதியில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. இதனால் அந்த தொகுதியை சமாஜ்வாதி விட்டு கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அதன்பிறகு நடந்த மெராடாபாத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2வது இடம் பிடித்தது. இதனால் அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்கிறது.

அதேபோல் காங்கிரஸ் கட்சி பாலியா தொகுதியை கேட்கிறது. இந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால் இங்கு சமாஜ்வாதி கட்சி மிகவும் வலுவாக உள்ளது. இங்கு தற்போது பாஜக எம்பி இருந்தாலும் கூட வரும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் அஜய் ராயை இங்கு களமிறக்கினால் வெற்றி நிச்சயம் என சமாஜ்வாதி நம்புகிறது. இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சியும் இந்த தொகுதியை கேட்கிறது.

மேலும் பிஜ்னூர் நாடாளுமன்ற தொகுதியை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி காங்கிரஸ் கட்சி கேட்கிறது. இங்கு தலித் மக்கள் கணிசமாக உள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் சமாஜ்வாதி கூட்டணியில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியை கேட்கிறது. ஆனால் இந்த தொகுதியில் சமாஜ்வாதி கூட்டணி கடந்த முறை வென்ற நிலையில் இந்த முறை அகிலேஷ் யாதவ் தனது கட்சி வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளார்.

இப்படியாக மொரடாபாத், பாலியா, பிஜ்னூர் ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்பாக காங்கிரஸ்-சமாஜ்வாதி இடையே மோதல் போக்கு உள்ளது. இதனால் தொகுதி உடன்பாடு என்பது இன்னும் எட்டப்படவில்லை. விரைவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரையில் கூட்டணி தலைவர் என்ற முறையில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் அகிலேஷ் யாதவ் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சி உடனான தொகுதி பங்கீடு என்பது சுமூகமாக முடிவடைந்த பிறகே ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார். இதனால் மேற்கு வங்கம், பஞ்சாப் போன்று உத்தர பிரதேசத்திலும் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் தனித்து களமிறங்க உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+