ஒரு சைக்கோவை வேலைக்கு வைத்து.. ரூ.2000 சம்பளமும் கொடுத்த பரிதாப பெற்றோர்
7 வயது சிறுவனை டியூஷன் வாத்தியார் பலமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
லக்னோ: ஒரு சைக்கோவை வேலைக்கும் வைத்து 2000 ரூபாய் சம்பளமும் தந்திருக்கிறார்கள் பெற்றோர்!
உத்திர பிரதேசத்தில் நவ்ரங்காபத் அலிகார் எனும் இடம் உள்ளது. இந்த இடத்தில் வசித்து வருபவர் அமித். இவர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவருக்கு 7 வயதில் மகன் இருக்கிறான். அவனுக்கு பாடம் சொல்லித்தர ஒரு டியூஷன் வாத்தியாரை ஏற்பாடு பண்ணினார் அமித். அந்த வாத்தியார் பெயர் கமல் ஷர்மா.

2000 ரூபாய் சம்பளம்
தன்னுடைய ஆபீசிலேயே ஒரு மணி நேரம் வந்து பையனுக்கு பாடம் நடத்திட்டு போகுமாறு அமித் கேட்டுக் கொண்டார். அதற்காக 2 ஆயிரம் ரூபாய் சம்பளமும் பேசப்பட்டது. இதற்கு ஒத்து கொண்ட அந்த வாத்தியார் மதியானம் 2 மணியில இருந்து 3 மணி வரைக்கும் தினமும் டியூஷன் எடுக்கிறார். இப்படியே ஆறு மாசம் போய்விட்டது.

அமித் அதிர்ச்சி
ஒருநாள் தன்னுடைய நிறுவனம் சம்பந்தமாக அங்கே பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை எடுத்து ஆராய்ந்தார். ஆபீஸ் சம்பந்தமாக வீடியோவை பார்க்க போன அமித்துக்கு தூக்கி வாரிப்போட்டது. வீடியோவில் தன் மகனை ஆசிரியர் பின்னி எடுத்து கொண்டிருக்கிறார்.

ஷூவால் அடிக்கிறார்
மாணவனை வலுவாக பிடித்துகொண்டு சரமாரியாக அடிக்கிறார், பிறகு அவனது காதை திருகுகிறார், கைவிரல்களை ரொம்ப கொடூரமாக கொடுமைப்படுத்துகிறார், தலைமுடியை வலிக்கும்படி பிடித்து இழுக்கிறார், பிறகு ஷூவை கழட்டி சரிமாரியாக தாக்குகிறார். பையனை இழுத்து பிடித்து பற்களால் நறநறவென கடிக்கிறார்.

மிஷின் சத்தம்
தன் கம்பெனியில் வைத்தே தன் மகனை அடித்து கொடுமைப்படுத்தியிருப்பதை பார்த்து அமித் கண்கலங்கியும் ஷாக் ஆகியும் நின்றார். வாத்தியார் அடிக்கும் நேரங்களில் அமித் உட்பட ஏராளமானோர் அந்த கம்பெனியில்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்த மிஷின்கள் சத்தத்தால் வாத்தியாரின் இந்த வேலை வெளியே தெரியவே இல்லை.

போலீசில் புகார்
7 வயது பையனும், வாத்தியார் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்றும், வீட்டில் போய் இதை சொன்னால் மறுநாள் வாத்தியார் திரும்பவும் வேலையை பலமாக காட்டுவார் என்று நினைத்தும் பயந்து கொண்டு சொல்லவே இல்லை. இதையடுத்து அமித் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

வயிறு எரிகிறது
விரைந்து வந்த போலீசார் வாத்தியார் கமல் மீது சட்டப்பிரிவு 307 -ன் படி கொலை முயற்சி பதிவு செய்து கைது செய்தனர். இப்படி 2 ஆயிரம் ரூபாயும் சம்பளம் வாங்கிக்கொண்டு, 7 வயது சிறுவனை கமல் அடிக்கும் மிக கொடூரமான துன்புறுத்தல் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், அனைவரையும் வயிறு எரிய செய்ய வைத்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications