உ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்!

இந்து சமாஜ் முன்னாள் தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கில் இரண்டு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய சூரத் ஸ்வீட் பாக்ஸ்

    லக்னோ: இந்து சமாஜ் முன்னாள் தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கில் இரண்டு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்து சமாஜ் இயக்கத்தின் தலைவராக இருந்த கமலேஷ் திவாரி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த வாரம் லக்னோவில் கத்தியால் குத்தப்பட்டு பின்பு துப்பாக்கியால் சுடப்பட்டும் திவாரி கொடூரமாக கொல்லப்பட்டார். இவரை கொலை செய்தவர்களை உத்தர பிரதேச போலீஸ் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தது.

    எப்படி கைது

    எப்படி கைது

    இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2015-ம் ஆண்டு இஸ்லாம் மதம் தொடர்பாக கமலேஷ் திவாரி சொன்ன கருத்துக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய 3 பேர் சில நாட்கள் முன் சூரத் நகரில் கைது செய்யப்பட்டனர்.

    இன்னொருவர் கைது

    இன்னொருவர் கைது

    அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி நாக்பூரில் கைது செய்யப்பட்டார். இவர்கள் கொடுத்த ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு பேரை போலீசார் தேடி வந்தனர். ஆஸ்பாக், மொய்னுதீன் பதான் ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வந்தனர்.

    மறைவு

    மறைவு

    இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு நேபால் சென்று தலைமறைவானார். அதன்பின் இவர்கள் குஜராத் சென்று சுற்றி இருக்கிறார்கள். அங்கிருந்து மீண்டும் உத்தர பிரதேசம் வந்து தங்கள் உறவினர்களிடம் பணம் வாங்கி இருக்கிறார்கள். இதை கண்டுபிடித்த போலீசார் இவர்களின் மொபைல் போனை டிராக் செய்துள்ளனர்.

    முக்கியம்

    முக்கியம்

    இதை வைத்து போலீசார் அவர்களை பிடித்தனர். குஜராத்தை சேர்ந்த தீவிரவாத தடுப்பு படைப்பிரிவு இந்த கைதை செய்துள்ளது. ராஜஸ்தான் பார்டரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள்தான் இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+