Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க இருந்து அடிக்கிறாங்கனே தெரியல.. உ.பி.யில் பாஜக அமைச்சர் வாகனம் மீது கல்வீச்சால் திடீர் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் என்ற இடத்தில் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சத்பால் சிங் பாகேலின் கான்வாய் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநில சட்டசபைக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அந்த மாநிலத்துக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தற்போதைய ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைப்பதற்கு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என அகிலேஷ் யாதவ் பாஜகவுக்கு இணையாக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

உத்திர பிரதேச தேர்தல்

உத்திர பிரதேச தேர்தல்

இம்மாநிலத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது. இதன் முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ந் தேதி 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. சஹாரான்பூர், மொரொதாபாத், பைரேலி, ராம்பூர், பிஜ்னோர், அம்ரோஹா, சம்பல், புதான், ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது.

பாஜகவினர் உறுதி

பாஜகவினர் உறுதி

2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இம்முறை 200க்கும் அதிகமான இடங்களைத்தான் பாஜகவால் பெற முடியும் என்கின்றன கருத்து கணிப்பு. களத்தில் பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியைத் தரும் என்றும் அக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து 3ஆம் கட்ட தேர்தலை சந்திக்க பாஜகவினர் தயராகி வருகின்றனர். கருத்துகணிப்புகளை பொய்யாக்கி அதிக இடங்களை கைப்பற்றுவோம் என பாஜகவினர் உறுதியாக கூறி வருகின்றனர்.

கல்வீசி தாக்குதல்

கல்வீசி தாக்குதல்

இந்நிலையில் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சத்ய பால் சிங் பாகேலின் கான்வாய் மீது உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் போட்டியிடும் கர்ஹால் சட்டமன்ற தொகுதியில் சத்ய பால் சிங் பாகேல் பாஜக வேட்பாளராக போட்டியிருகிறார்.

அமைச்சருக்கு காயமில்லை

அமைச்சருக்கு காயமில்லை

இந்த தாக்குதலின் போது பாஜக தலைவர் சத்ய பால் சிங் பாகேல் காயமின்றி தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பாகேலின் கான்வாய் ஒரு வாகனத்தின் கண்ணாடி கற்களால் தாக்கப்பட்டு நொறுங்கியது. முன்னதாக, அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாகேல், மற்ற கட்சி தலைவர்களுடன் அடிகுல்லாபூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ரஹ்மத்துல்லாபூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பாஜக கண்டனம்

பாஜக கண்டனம்

பாகேல் மீதான தாக்குதலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் சமாஜ்வாதி கட்சி குண்டர்கள் இருப்பதாக உத்தரபிரதேச துணை முதல்வர் கேபி மவுரியா குற்றம் சாட்டியுள்ளார். "அகிலேஷ் யாதவ் ஜி, தேர்தலில் தோல்வி பயத்தால், பாஜக வேட்பாளர், மத்திய அமைச்சர் பேராசிரியர் எஸ்பி சிங் பாகேல் மற்றும் பாஜக தலைவர்களை உங்கள் செல்ல குண்டர்கள் மூலம் தாக்குகிறீர்கள். நேற்று பாஜக எம்பி கீதா ஷக்யாவும் தாக்கப்பட்டார். இரண்டு சம்பவங்களின் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். " என்று மவுரியா தொடர்ச்சியான ட்வீட்களில் புகார் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+