உ.பி.யில் இருந்து இத்தனை பிரதமர்கள்.. அடடே சுவாரசியம்
லக்னோ: அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம்தான் பிரதமர்கள் உட்பட விவிஐபிக்களை அதிகம் வெற்றி பெற வைத்திருக்கிறது.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
5-ம் கட்டமாக 51 தொகுதிகளுக்கு நாளை திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னோ உள்ளிட்ட 14 தொகுதிகளும் அடங்கும்.

நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு, உத்தரப்பிரதேசத்தின் புல்புர் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வென்றிருந்தார். அவரைத் தொடர்ந்து விஜயலட்சுமி பண்டிட் 2 முறையும் வி.பி.சிங் ஒருமுறையும் இத்தொகுதியில் வென்றிருக்கின்றனர். 1980களுக்குப் பின்னர் காங்கிரஸிடமிருந்து ஜனதா தளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கைகளுக்கு இத்தொகுதி மாறியது. இங்குதான் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போட்டியிட்டது அலகாபாத் தொகுதி. அலகாபாத்தில் 2 முறை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் போட்டியிட்டு வென்றிருக்கிறார். அமிதாப்பச்சன், முரளிமனோகர் ஜோஷி ஆகியோரும் அலகாபாத் மாஜி எம்.பி.க்கள்தான்.
காங்கிரஸின் கோட்டையான ரேபரேலி கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கிறது. 1967 முதல் 1977 வரை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வசம் இத்தொகுதி இருந்தது. இத்தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 4 முறை எம்.பி.யாக வென்றிருக்கிறார்.
நேரு குடும்பத்தின் இன்னொரு கோட்டையாக இருப்பது அமேதி. 1980-ல் சஞ்சய் காந்தியும், அவரைத் தொடர்ந்து ராஜீவ் காந்தியும் இத்தொகுதியை தக்க வைத்தனர். 1999 தேர்தலில் சோனியா காந்தி இத்தொகுதி எம்.பி.யானார். அதன் பின் 3 முறை ராகுல் காந்தி வசம் அமேதி இருந்து வருகிறது.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் 1977 முதல் 2004 வரை தம் வசம் வைத்திருந்த பால்லியா தொகுதியும் உ.பி.தான். அவரது மகன் நீரஜ் சேகர் 2 முறை இத்தொகுதியை தன் வசம் வைத்திருந்தார்.
2009-ல் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வசம் இருந்த வாரணாசி தொகுதியை இப்போது பிரதமர் மோடி கைப்பற்றியிருக்கிறார், இம்முறையும் பிரதமர் மோடியே அத்தொகுதியில் களம் காண்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications