ஓட்டலில் அடைத்து வைத்து ஒரு மாதமாக விதவையை பலாத்காரம் செய்த பாஜக எம்எல்ஏ.. அதிர்ச்சி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் பாணியில் மீண்டும் ஒரு அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. பாஜக எம்எல்ஏ ரவீந்திர நாத் திரிபாதி, ஒட்டலில் அடைத்து வைத்து விதவையை பலாத்காரம் செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ ரவீந்திர நாத் திரிபாதி உள்பட 7 பேர் மீது படோஹி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் படோஹி பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). விதவைப் பெண்னான இவர் கடந்த 10ம் தேதி அங்குள்ள போலீஸ் ஸ்டேனில் பாஜக எம்எல்ஏ மீது புகார் அளித்தார்.

கல்யாணம் செய்வதாக கூறி
அவர் தனது மனுவில், படோஹி தொகுதியின் எம்எல்ஏ ரவீந்திர நாத் திரிபாதி. இவர் பாஜகவைச் சேர்ந்தவர். இவருடைய மருமகன் சந்தீப் திவாரி எனனை கடந்த 2016ம் ஆண்டு பலாத்காரம் செய்தார். அப்போது நான் அவரை பற்றி புகார் அளிக்காமல் இருந்தால் கல்யாணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். இதை நம்பி நானும் அவர் மீதான புகாரை வாபஸ் பெற்றேன்.

ஒரு மாதம் பலாத்காரம்
அதன்பின்னர் கடந்த 2017ம் ஆணடு உத்தரப்பிரதேச மாநில சட்டபை தேர்தல் நடந்தது. அப்போது சந்தீப் திவாரி , அவருடைய மாமனார் ரவீந்திர நாத் திரிபாதி உள்பட 7 பேர் என்னை ஒரு ஓட்டலில் சிறை வைத்து ஒரு மாதமாக தொடர்ந்து பலாத்காரம் செய்தனர்.

கருக்கலைப்பு
இதனால் கர்ப்பம் அடைந்த என்னை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்தார்கள். இது தொடர்பாக எம்எல்ஏ ரவீந்திர நாத் திரிபாதி உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரை விசாரிணை நடத்திய படோஹி போலீஸார், பாஜக எம்எல்ஏ உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

நடவடிக்கை
அந்த பெண்ணிடம் மாஜிஸ்ரேட் முன்பு வாக்கு மூலம் பெற்று அதன் அடிப்படையில் 7 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்ககப்படும் அந்த மாவட்ட எஸ்பி ரவீந்திர வர்மா தெரிவித்தார். முன்னதாக உன்னாவ் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் பலாத்காரம் செய்ததால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த விவகாரம் உத்தரப்பிரதேசதை தாண்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்ணின் தந்தை உள்பட பலரும் இறந்து போனார்கள்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications