ஹரியானாவில் கூட்டணியில் சேர்க்க மறுத்த காங்கிரஸை பழிதீர்த்த அகிலேஷ்- உபி இடைத்தேர்தலில் செம்ம கேம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமலேயே தன்னிச்சையாக சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டதாக குமுறுகிறது காங்கிரஸ். ஆனால் நாங்க தரும் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்தால் போட்டியிடுங்கள் என காங்கிரஸுக்கு சமாஜ்வாதி கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
இந்தியா கூட்டணியில் சமாஜ்வாதி கட்சியும் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் சமாஜ்வாதி கட்சியை கூட்டணியில் சேர்ப்பதில் காங்கிரஸ் தயக்கம் காட்டி வந்தது. ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளை கூட்டணியில் சேர்க்க மறுத்தது காங்கிரஸ். தற்போது ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவிய நிலையில் கதறிக் கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 10 தொகுதிகளில் 6-ல் போட்டியிடும் வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்துவிட்டார். இதனால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்தும் எங்களுடன் சமாஜ்வாதி கட்சி ஆலோசிக்கவில்லை என்கிறது காங்கிரஸ். ஆனால் சமாஜ்வாதி கட்சியோ, 6 தொகுதிகளில் பாஜகவை எங்களால்தான் வீழ்த்த முடியும் என்பதால் வேட்பாளர்களை அறிவித்தோம். 4 தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்; காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 2 தொகுதிகளைத் தர தயாராக இருக்கிறோம் என அலட்சியம் காட்டுவதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.
அத்துடன் நிற்காமல், ஹரியானா தேர்தலில் சமாஜ்வாதி- ஆம் ஆத்மி- காங்கிரஸ் இணைந்து போட்டிருந்தால் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றி இருக்க முடியும். அதை தவறவிட்டதும் காங்கிரஸ்தான் என சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது அக்கட்சி.
சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் முலாயம்சிங் யாதவின் அண்ணனின் பேரன் தேஜ் பிரதாப், கர்ஹால் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications