ரக்ஷா பந்தன் அன்று பெண்களுக்கு இலவச பேருந்து சேவை! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ரக்ஷா பந்தன் அன்று பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அறிவித்துள்ளது. 14 மாவட்டங்களில் இந்த இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரக்ஷா பந்தன் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நள்ளிரவு முதல் 31ம் தேதி நள்ளிரவு வரை மாநிலத்தின் 14 மாவட்டங்களில் பெண்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படும். இப்படி ரக்ஷா பந்தன் விழாவுக்காக சிறப்பு இலவச பேருந்துகள் இயக்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கடந்த காலங்களில் இதுபோன்ற பேருந்துகள் இயக்கப்பட்டிருக்கின்றன அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

UP Chief Minister Yogi Adityanath has announced that free bus services will be provided to women on Raksha Bandhan

அதன்படி லக்னோ, கான்பூர், மீரட், பிரயாக்ராஜ், வாரணாசி, காசியாபாத், அலிகார், மொராதாபாத், ஜான்சி, பரேலி, கோரக்பூர், ஷாஜஹான்பூர், ஆக்ரா,
மதுரா-பிருந்தாவனம் உள்ளிட்ட மாவடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "பெண்களின் முன்னேற்றத்தில் இந்த அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஏராளமான சலுகைகள் அவர்களுக்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது முன்னேற்றம்தான் இந்த நாட்டின் முன்னேற்றம் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தை போலவே மத்திய பிரதேசமும் சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதாவது, ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் சிறப்புரையாற்றிய அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இது இனி ரூ.1,250 ரூபாயாக உயரும்" என்று அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தை போலவே மத்திய பிரதேசமும் சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதாவது, ரக்ஷா பந்தன் பண்டிகையொட்டி நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் சிறப்புரையாற்றி அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இது இனி ரூ.1,250 ரூபாயாக உயரும்" என்று அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+