பட்டேல் சிலையை தொடர்ந்து ராமருக்கும் பிரம்மாண்ட உயர சிலை.. உ.பி முதல்வர் யோகி அறிவிப்பு!
குஜராத்தில் நிறுவப்பட்டு இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் பெரிய ராமர் சிலை நிறுவ பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது.
லக்னோ: குஜராத்தில் நிறுவப்பட்டு இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் பெரிய ராமர் சிலை நிறுவ பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது.
குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி கடந்த வாரம் திறந்து வைத்துள்ளார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது.
இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும். இந்த நிலையில் தற்போது உத்தர பிரதேசத்தில் பெரிய ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது.

ராமருக்கு சிலை
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் ராமருக்கு சிலை வைக்க திட்டமிட்டு இருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அயோத்தியில் இந்த ராமர் சிலை வைக்கப்பட உள்ளது. மிகவும் பிரமாண்டமாக இந்த சிலையை கட்ட இருக்கிறார்கள்.

என்ன சிறப்பு
ராமர் கோவில் இல்லாமல் இந்த சிலை தனி சுற்றுலாதலமாக இருக்கும். இந்த சிலை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டமிடப்பட்டு இருக்கும் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட இருக்கிறது. இதன் உயரம் 151 மீட்டர் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

அறிவிப்பு எப்போது
இதுகுறித்த முறையான அறிவிப்பு வரும் தீபாவளி அன்று வெளியிடப்படும். வடஇந்தியாவில் புதன் கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று உத்தர பிரதேசத்தில் தீபாவளி கொண்டாட பெரிய அளவில் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது . அன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.

கோரிக்கை வைக்கிறார்கள்
இந்த நிலையில் இந்த சிலையை சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட அதிக உயரத்தில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பட்டேல் சிலையின் உயரம் 182 மீட்டர் ஆகும். அதைவிட அதிக உயரத்தில் இந்த சிலையை கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications