லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டசபை தேர்தல்:உ.பி கேபினட் அமைச்சரவை இன்று மாற்றியமைப்பு-7பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான கேபினட் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படுகிறது. 7 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேர்க உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஜாதி, மத கணக்குகளுடன் களத்தில் நிற்கின்றன.

மத்திய அமைச்சர்கள்

மத்திய அமைச்சர்கள்

ஏற்கனவே பாஜகவின் 14 லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள், மத்திய அமைச்சர்கள் பாஜகவின் பொறுப்பாளர்களாக உ.பி.யில் களமிறக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசில் உ.பி. மாநிலத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் உள்ளது.

தேர்தல் களத்தில் கட்சிகள்

தேர்தல் களத்தில் கட்சிகள்

சமாஜ்வாதி கட்சி, பாஜகவை பிரதானமாக எதிர்க்கும் கட்சியாக களத்தில் இருக்கிறது. மாயாவதி கட்சியின் நிலைப்பாடு பிராமணர்கள் பிளஸ் தலித்துகள் வாக்குகளை குறிவைக்கிறது. காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறது.

உ.பி. அமைச்சரவை மாற்றம்

உ.பி. அமைச்சரவை மாற்றம்

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தீவிரமாக தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளன. இதன் ஒருபகுதியாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட உள்ளது.

ஜாதி பிரதிநிதித்துவம்

ஜாதி பிரதிநிதித்துவம்


முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மீது பல்வேறு ஜாதி சமூகங்கள் அதிருப்தியில் இருக்கின்றன. இந்த அதிருப்தியை சரிகட்டு வகையில் அமைச்சரவை மாற்றம் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. அதேபோல் அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை சமாளிக்கும் வகையிலும் இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்காக ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் இன்று பிற்பகல் லக்னோ வந்துசேர இருக்கிறார்.

English summary
BJP Sources said that Uttar Pradesh Chief Minister Yogi Adityanath is likely to expand his cabinet this evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X