Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபேஸ்புக்கில் வந்த போஸ்ட்.. யோகி செஞ்ச நல்ல காரியம்.. குவியும் பாராட்டுக்கள்.. உற்சாகத்தில் உபி பாஜக

ஏழை பெண்ணுக்கு ஆபரேஷனுக்கு முதல்வர் யோகி உதவி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: "பரவாயில்லையே.. ராமராஜ்ஜியம் மட்டுமில்லாமல், யோகிக்கு உதவிகூட செய்ய தெரியுமா.. அவருக்கும் இதயம்ன்னு ஒன்னு இருக்கே" என்று அம்மாநில மக்கள் மூக்கின் மீது விரலை வைத்து கொண்டுள்ளனர்.. இதற்கு காரணம், ஒரு பெண்ணின் ஹார்ட் ஆபரேஷனுக்கு யோகி நிதி தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, சீக்கிரமாக குணமடைந்து வர வேண்டும் என்று தனிப்பட்ட முறையிலும் வாழ்த்து சொல்லியும் உள்ளார்!

Recommended Video

    Sonu Sood Gifts Tractor to a Farmer Family

    யோகியை பொறுத்தவரை உபியின் முதல்வராக பதவி ஏற்றதுமே முதலே பரபரப்பாக பேசப்பட்டு வருபவர்.. இவரது செயல்பாடுகள், நடவடிக்கைகள், அறிவிப்புகள் பல சமயம் அம்மாநில மக்களுக்கே ஷாக் தந்துவிடும்.

    இப்போது இந்தியாவிலேயே அதிக அளவு வன்முறை நிகழும் மாநிலமாக உபி உள்ளது. ஆனால் யோகியோ இதை பற்றி எல்லாம் கவலைப்படுவதாக இல்லை.. ஒரு பேட்டியில்,"நம்ம மாநிலத்தில் குற்றங்கள் குறைவாகத்தான் நடக்கிறது.. அதுவும் இந்த 3 வருஷத்தில் உத்தரபிரதேசத்தில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது" என்று உல்டாவாக சொன்னார்.

    ராமராஜ்ஜியம்

    ராமராஜ்ஜியம்

    அதுமட்டுமில்லை.. பிரச்சனை இவ்வளவு நடந்து வரும்நிலையில், "இந்த நாட்டில் ராமராஜ்ஜியம்தான் இருக்கவேண்டும்.. சோசியலிசம் இருக்கக்கூடாது.. ராம ராஜ்ஜியத்தை கொண்டுவருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது" என்று யோகி அறுதியிட்டு சொன்னாலும், பெண்களின் பாதுகாப்பு அங்கு நல்லா இருக்கிறதா என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.

     ஃபேஸ்புக் போஸ்ட்

    ஃபேஸ்புக் போஸ்ட்

    இப்படி பலதரப்பட்ட எதிர்ப்புகள் யோகிக்கு அந்த மாநிலத்தில் இருந்தாலும், ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளார்.. அதை பற்றின செய்திதான் இது.. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் வைரலானது... அதில் கோரக்பூர் மாவட்டம், கேம்பியர்கஞ்ச் தாலுகாவில் மச்லிகான் என்ற கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி வசித்து வருகிறார். அவர் பெயர் ராகேஷ் சந்திர மிஸ்ரா.

    சிகிச்சை

    சிகிச்சை

    இவரது மகள் மதுலிகா மிஸ்ரா.. பிஎட் படித்து வருகிறாராம்.. இவருக்கு ஹார்ட் பிரச்சனை இருந்துள்ளது. வால்வில் பிரச்சனை இருப்பதால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும், அதற்கு நிறைய பணம் செலவாகும் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்ட்தான் யோகியின் கவனத்துக்கும் போனது.. உடனே அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தார்.

    மதுலிகா

    மதுலிகா

    அந்த செய்தியின் உண்மை தன்மை ஆராயப்பட்டது.. அது பின்னர் உறுதியும் செய்யப்பட்ட நிலையில், கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் யோகி, முதல்வர் தொகுப்பு நிதியில் இருந்து மதுலிகாவின் சிகிச்சைக்கு ரூ. 9.90 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தாவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமில்லை.. வெறும் நிதி ஒதுக்கியதோடு நிற்காமல், மதுலிகா சீக்கிரமாக குணமடைந்து வர வேண்டும் என்று ராகேஷ் சந்திர மிஸ்ராவிற்கு பெர்சனலாக ஒரு லட்டர் எழுதி தன் வாழ்த்தையும் சொல்லி உள்ளார்.

     பாராட்டுக்கள்

    பாராட்டுக்கள்

    மேதந்தா ஆஸ்பத்திரியில் ஆபரேஷனுக்கான செலவுகள் மதிப்பீட்டின் அடிப்படையில் அம்மாநில அரசு இந்த பணத்தை தந்துள்ளது. வரும் 24-ம் தேதி மதுலிகாவுக்கு ஆபரேஷன் செய்ய போகிறார்கள்.. ஹார்ட் ஆபரேஷனுக்கு யோகி செய்த இந்த உதவியை நினைத்து அம்மாநில மக்கள் உண்மையிலேயே பாராட்டி வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+