32% வாக்குகள்.. பாஜக அலையில் காணாமல் போன சமாஜ்வாதி - அதிகரித்த வாக்குகள் ஆனாலும் தோற்ற அகிலேஷ் யாதவ்
லக்னோ: நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தலை இந்தியாவே உற்று நோக்கியது. யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதைக் காண ஒட்டு மொத்த இந்தியாவே ஆவலாக இருந்தது.
2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான 'செமி பைனல்' ஆகவே இந்த உத்தரப்பிரதேச தேர்தலை அனைத்து கட்சிகளும் கருதியது. உத்தரப்பிரதேச தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகியது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் பாஜக 273 இடத்திலும், சமாஜ்வாதி 125 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக
எதிர்பார்த்ததுபோலவே, உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முழுதாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து, மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது யோகி தலைமையிலான அரசு. விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் சம்பவம் எல்லாம் பாஜகவுக்கு எதிராக பார்க்கப்பட்டது, ஆனாலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 41.6 சதவிகித வாக்குகளை இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது.

2017 தேர்தல்
கடந்த 2017 தேர்தலில் பாஜக மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் 39.6 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல் சமாஜ்வாதி கட்சி 2017 தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வென்று 21.8 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் 125 இடத்தில் வெற்றி பெற்று 32 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது சமாஜ்வாதி கட்சி.
Recommended Video

சமாஜ்வாதி
இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும், சமாஜ்வாதி கட்சிக்கான வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2012 தேர்தலில் 224 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தபோது, சமாஜ்வாதி 29.15 சதவிகித வாக்குகளைத் தான் பெற்றது. ஆனால் இந்த முறை அதிக ஓட்டு சதவிகிதத்தைப் பெற்றாலும், ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. பாஜகவின் அலையில் ஒட்டு மொத்தமாக சமாஜ்வாதி காணாமல் போயுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications