உ.பி.யில் மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்! மூன்றே நாளில் திடீர் ட்விஸ்ட்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மனைவியை அவருடைய கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்த சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்டாக அந்த கணவன் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சாந்த்கபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராதிகாவுக்கு ஏற்கெனவே தனது கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல், ராதிகாவின் திருமணத்திற்கு பிறகும் நீடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பப்லுவுக்கு தெரியவந்தது.
அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனைவியை கண்டித்ததாக தெரிகிறது. ஆனால் ராதிகாவோ, தனது காதலன் விகாஷை தன்னால் மறக்க முடியவில்லை என தெரிவித்தார். எனினும் பலமுறை தனது மனைவிக்கு அறிவுறுத்தியும் அவர் கேட்டபாடில்லை.
பப்லு செய்த காரியம்
இதனால் நன்கு யோசித்த பப்லு, தனது மனைவி ராதிகாவை அவரது கள்ளக்காதலனுடனேயே சேர்த்து வைக்க முடிவு செய்தார். இதை தனது மனைவியிடமும் ஊர் மக்களிடமும் தெரிவித்தார். இதற்கு ராதிகாவுக்கு குஷியாக இருந்தாலும் ஊர்மக்கள் ஏற்கவில்லை.
ஊர் மக்கள் எதிர்ப்பு
இது தவறான முன்னுதாரணமாகிவிடும். பின்னர் கள்ளக்காதலை வளர்த்துக் கொள்ள பலருக்கும் தைரியமாகிவிடும் என்றெல்லாம் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களை பப்லு பேசி சமாதானம் செய்து வைத்தார். இதையடுத்து ராதிகாவும் விகாஷும் இந்த திருமணத்திற்கு ஏற்றுக் கொண்டனர்.
குழந்தைகள் முன்பு திருமணம்
இதையடுத்து நீதிமன்றத்தில் வைத்து அவர்களுக்கு பப்லு திருமணத்தை செய்து வைத்தார். பிறகு அங்கிருந்து ஊர் கோயிலுக்கு சென்ற புதுமணத் தம்பதிகள், தங்கள் குழந்தைகள், பெரியவர்கள், உறவினர்கள் முன்பு மாலை மாற்றிக் கொண்டனர். இதையடுத்து தனது குழந்தைகளை அழைத்துச் செல்ல ராதிகா முற்பட்ட போது, "குழந்தைகளை நானே வளர்த்துக் கொள்கிறேன்" என பப்லு தெரிவித்துவிட்டார்.
சம்மதம் தெரிவித்த ராதிகா
இதையடுத்து ராதிகாவும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பப்லுவை பாராட்டினர். சிலர் இதை விமர்சனம் செய்தனர். குழந்தைகளை வைத்துக் கொண்டு இப்படி செய்யலாமா, அந்த குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு கிடைக்க வேண்டாமா என்றெல்லாம் விவாதித்தனர்.
அந்த 7 நாட்கள்
அந்த 7 நாட்கள் கிளைமேக்ஸை வைத்தும் மீம்ஸ்கள் பறந்தன. இந்த படத்தில் ராஜேஷ் , அம்பிகா, பாக்யராஜ் நடித்திருந்தனர். முதலில் அம்பிகாவும் பாக்யராஜும் விரும்புவர். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அம்பிகாவை ராஜேஷ் திருமணம் செய்து கொள்வார். திருமணத்திற்கு பிறகுதான் அம்பிகா, பாக்யராஜை விரும்பியது தெரியும். இதனால் தனது மனைவியை பாக்யராஜுடன் சேர்த்து வைக்க முடிவு செய்வார். ஆனால் இதற்கு அம்பிகாவும் பாக்யராஜும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
பாக்யராஜ் டயலாக்
அதற்கு பாக்யராஜ், "சாரே என் காதலி உங்கள் மனைவியாகலாம். ஆனால் உங்கள் மனைவி என் காதலியாகாது" என ஒரு டயலாக் சொல்வார். தகாத உறவால் தனது மனைவியையோ அந்த கள்ளக்காதலனையோ தீர்த்து கட்டி விட்டு ஜெயிலுக்கு போனவர்கள் மத்தியில் இவர் இப்படி இருக்கிறாரே என அவரை புகழ்ந்தனர்.
3 நாளில் ட்விஸ்ட்
இந்த நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக திருமணமான 3 நாட்களுக்கு பிறகு விகாஸின் வீட்டிற்கு வந்த பப்லு, தனது மனைவி ராதிகாவை தன்னிடமே கொடுத்துவிடுமாறு கூறினார். இதனால் விகாஸ் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உறவினர்களும் அதிர்ந்தனர்.
விகாஸ் வீட்டுக்கு ஓடிய பப்லு
பப்லுவிடம் விகாஸ், "என்ன நடந்தது, நீங்கள்தானே திருமணம் செய்துவைத்தீர்கள். அதற்குள் இப்படி வந்தால் என்ன அர்த்தம்" என கேட்டாராம். இதற்கு பப்லு, "ராதிகா இல்லாமல் எனது 2 குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. மேலும் ராதிகாவை நான்தான் கட்டாயப்படுத்தி திருமணத்தை செய்து கொடுத்தேன். அவர் மீது எந்த தவறும் இல்லை" என பப்லு கண்ணீருடன் தெரிவித்தாராம்.
இதுக்கு பருத்தி மூட்டை...
இதையடுத்து விகாஸின் குடும்பத்தினரும் அந்த குழந்தைகளுக்காக ராதிகாவை மீண்டும் பப்லுவிடமே அனுப்பி வைத்துவிட்டனர். இதை அறிந்த இணையதளவாசிகள், இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே என தெரிவித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications