உ.பி. தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமல் ராணி கொரோனாவுக்கு பலி- யோகி ஆதித்யநாத் இரங்கல்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமல் ராணி (வயது) கொரோனாவால் பலியானார்.
உத்தரப்பிரதேச தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமல் ராணிக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து ஜூலை 18-ந் தேதியன்று லக்னோ சஞ்சய்காந்தி முதுகலை மருத்துவமனை அறிவியல் நிலையத்தில் சிகிச்சைக்காக கமல் ராணி சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி கமல் ராணி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
நாட்டில் மாநில அமைச்சர் ஒருவர் கொரோனாவால் பலியாகி இருக்கிறார். ஏற்கனவே கொரோனாவுக்கு எம்.எல்.ஏக்கள் சிலர் பலியாகி உள்ளனர்.
அமைச்சர் கமல் ராணியின் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் மோடியின் ஹேக்காதான் உரையை ட்விட்டரில் நேற்று ரீ ட்வீட் செய்திருந்தார் கமல் ராணி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications