என் முன்னாடியே "மட்டன்".. காதல் தம்பதிக்குள் வந்த சண்டை.. ஆளுக்கு ஒரு ரூமில் விஷம் குடித்து.. கொடுமை

அசைவ உணவு சமைப்பது காரணமாக தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

லக்னோ: "நான் சுத்த சைவம்.. மட்டனை என் முன்னாடி சமைக்காதீங்க" என்று மனைவி சொல்ல.. அதற்கு கணவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. இப்படியே 2 பேரும் சண்டை போட்டுக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் தற்கொலையில் இறங்கிவிட்டனர்!

உத்தரபிரதேசத்தில் வன்முறை எல்லா ரூபத்திலும் வந்து கொண்டிருக்கிறது.. இளம் தளிர்களை நாசம் செய்து உயிருடன் தீ வைத்து கொல்வதற்கு ஒரு முடிவு கட்ட முடியாமல் அந்த மாநிலம் உள்ளது.

up newly married couple attempt suicide over non veg cooing issue

இந்நிலையில், உப்புசப்பில்லாத விஷயத்துக்குகூட தற்கொலை வரை சென்று கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள்.. லக்கிம்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் குரு தயால்.. 22 வயது இளைஞர். இவர் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்தார்.. ரேஷ்மாவுக்கு 19 வயதாகிறது..

2 பேரும் உருகி உருகி காதலித்து கடந்த 12-ம் தேதி கல்யாணம் செய்து கொண்டனர். கல்யாணம் ஆகி 15 நாள் கூட ஆகவில்லை.. தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது.. ரேஷ்மா ஒரு வெஜிடேரியன்... குரு நான்-வெஜ் சாப்பிடுபவர்.. சம்பவத்தன்று மட்டன் வாங்கி கொண்டு வந்து சமைக்கும்படி தன் அம்மாவிடம் சொல்லி உள்ளார்.. இதை பார்த்த ரேஷ்மா, "நான் வெஜிடேரியன்.. சுத்த சைவம்.. இந்த மட்டனை கிச்சனில் சமைக்க வேண்டாம்.. வெளியே எடுத்துட்டு போய் சமைத்து சாப்பிடுங்க" என்று சொல்லி உள்ளார்.

உடனே குரு, "அதெல்லாம் முடியாது, கிச்சனில்தான் சமைக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்.. இப்படியே வாக்குவாதம் முற்றியுள்ளது.. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த குரு விஷம் எடுத்து குடித்து விட்டார்... இதை பார்த்த ரேஷ்மாவும் விஷம் எடுத்து குடித்துவிட்டார்.

2 பேரும் மயங்கி கீழே விழுந்ததை பார்த்ததும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. தீவிரமான சிகிச்சையும் தரப்பட்டது.. ஆனால் ரேஷ்மா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. குரு ரொம்பவும் சீரியஸாக இருக்கிறாராம்.. தொடர்ந்து சிகிச்சை நடந்து வருகிறது.

தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.. ஆனால், இதுவரை அறிக்கை பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கல்யாணம் ஆகி 15 நாள்கூட ஆகாத நிலையில், இவர்களின் இந்த முடிவுகளும், அதற்கான காரணமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+