தாயையும் மகளையும் ஒரே இடத்தில் வைத்து.. இளைஞர் செய்த கொடூரம்..மூன்றாவது பெண் நூலிழையில் எஸ்கேப்
லக்னோ: தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் 19 வயது பெண்ணையும் அவரது மகளையும் வீட்டில் வைத்த வாலிபர் ஒருவர் கொன்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

இது இரண்டு வீட்டாருக்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக இரு குடும்பங்களும் இடையே கடந்த நாட்களாக தொடர்ந்து சண்டை நடைபெற்றது. மேலும், அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், நேற்றிரவு அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கொடூரமாக வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
அவர்களைக் காப்பாற்ற வந்த உறவினர் பெண்ணையும் அந்த நபர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர், தற்போது சிகிச்சையாக உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து ஆக்ரா ஐஜி சதீஷ் கணேசன் கூறுகையில், "பக்கத்து வீட்டில் வசிக்கும் கோவிந்த் என்ற நபர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.
அவர் இக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்துள்ளான். அதைத்தொடர்ந்தே இந்த கொலைகள் நடந்துள்ளன. குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications