பாம்பின் வாயில் கட்டைவிரலை விட்ட உ.பி. இளைஞர்.. 3 முறை போட்டு தள்ளிடுச்சு! ரத்தம் சொட்ட சொட்ட ரீல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோஷியல் மீடியாவில் லைக்குகளையும் வியூஸ்களையும் அள்ளுவதற்காக இன்றைய இளைஞர்கள் செய்யும் விபரீத ஸ்டெண்ட்டுகள் நாளுக்கு நாள் ஓவராக எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன.. உயிரையை பணயம் வைத்து, லைக்குகளை அள்ள துடிப்பது வினோதமாகவும், கவலையாகவும் உள்ளது.. இதோ உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில் நடந்த ஒரு நெஞ்சை பதற வைக்கும் சம்பவம், ரீல்ஸ் மோகம் எத்தகைய ஆபத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது.. என்ன நடந்தது?

ஔரையா மாவட்டம் அச்சல்தா காவல் நிலையத்திற்கு உட்பட்டது சரை பஜார் என்ற பகுதி.. இங்கு அமைந்துள்ள ரயில்வே கிராசிங் அருகில், அமித் போர்வாள் என்பவருக்கு சொந்தமான பாக்கு கடை உள்ளது.. இதற்கு பக்கத்திலேயே இவரது மகன் 25 வயதான ரிஷி போர்வாள் என்பவருக்கு சொந்தமாக பூஜை பொருட்கள் விற்கும் கடையும் உள்ளது.

சம்பவத்தன்று இந்த கடைக்கு அருகில் திடீரென ஒரு பாம்பு புகுந்துள்ளது.. இதைப் பார்த்து. அங்கு நடமாடி கொண்டிருந்தவர்கள் தெறித்து ஓடினார்கள்.. ஆனால், ரிஷி போர்வாள், பயமே இல்லாமல் அதன் அருகில் சென்றார்..பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல், துணிச்சலாக அந்தப் பாம்பை பிடித்து விட்டார்.

Youth performs dangerous snake stunt for social media

பாம்பு ரீல்ஸ்

மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான காட்டில், இந்த விட்டு விடப்போவதாக சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றார். ஆனால் போகும் வழியில்தான் அந்த விபரீத ஐடியா அவருக்கு தோன்றியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இதை வைத்தே ரீல்ஸ் போட்டு பிரபலமாகிவிட வேண்டும் என்று முடிவு செய்தால்ர..

உடனே நண்பர்களுக்கு போனை போட்டு வரவழைத்தார்.. அவர்களை, பாம்புடன் ஸ்டண்ட் செய்து வீடியோ எடுக்க சொன்னார்.. வீடியோ சூட்டிங் விறுவிறுப்பாக ஆரம்பமானது. அப்போது ரிஷி, பாம்பின் தலைக்கு அருகில் கையை வைத்து விளையாடி கொண்டிருந்தார்.. பிறகு திடீரென பாம்பின் வாய்க்குள் தனது கட்டைவிரலை நுழைத்து விட்டார்.

ரத்தம் கொட்டியது

உடனே பாம்பு, சீற்றமடைந்து ரிஷியின் விரலை தீண்டியது.. வலியால் அலறிய ரிஷி கையை விலக்க முயன்றார்.. ஆனால் பாம்பு விடாமல் அடுத்தடுத்து 3 முறை விரலில் வேகமாக கடித்தது.. இதையடுத்து கை மற்றும் கட்டைவிரலில் இருந்து ரத்தம் கொட்டியது. நிலைமை சீரியஸாகிவிட்டதால், ரிஷி, உடனடியாக பாம்பை அங்கேயே தூக்கி வீச, அது மளமளவென்று செடிகளுக்குள் மறைந்தது.

ரிஷியை பாம்பு கடித்ததை நேரில் பார்த்த நண்பர்கள் அப்படியே உறைந்து போனார்கள்.. ஆனாலும், ரிஷி உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவில்லை.. காரணம், அதிர்ஷ்டவசமாக அந்த பாம்பு அதிக நச்சுத்தன்மை கொண்டதாக இல்லை.. இதனால் ரிஷியின் உயிர் தப்பியது.

ரீ-ரிக்கார்டிங் வீடியோ

இவ்வளவு நடந்தும்கூட, இந்தத் திகிலூட்டும் வீடியோவை ரிஷி, தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.. அதிலும் பின்னணி இசையுடன் சேர்த்து அப்லோடு செய்துள்ளார்..

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஆத்திரமடைந்து விட்டார்கள்.. சில லைக்குகளுக்காக விலைமதிப்பற்ற உயிரை பணையம் வைப்பது எந்த வகையிலும் நியாயம்? விலங்குகளுடன் செய்யப்படும் இதுபோன்ற சாகசங்கள் பெரும் விபரீதத்தில் முடியக்கூடும்.. வனத்துறையினரின் உதவியை நாடாமல் பொதுமக்கள் தாங்களே ஸ்டண்ட் செய்வது தற்கொலைக்குச் சமம் என்று காட்டமாக பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+