என்ன நடக்குது உ.பியில்? காரில் பாதுகாப்பின்றி கிடந்த இவிஎம் எந்திரம்.. தேர்தல் ஆணையம் ஆக்சன்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கார் ஒன்றில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்பு இன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 3-வது கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கையாளவில்லை என்று தொடர் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றனர்.
முக்கியமாக அங்கு வாக்கு பதிவு எந்திரங்களை எடுத்து செல்லும் தேர்தல் பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்புகள் கொடுக்கப்படவில்லை.

புகார்
சாலையில் நடந்தபடி பலர் மின்னனு வாக்கு பதிவு எந்திரங்களை எடுத்து செல்வதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கடத்த பிப்ரவரி 10ம் தேதி உத்தர பிரதேசத்தில் மின்னனு வாக்கு பதிவு எந்திரம் ஒன்று பாதுகாப்பு இன்றி கார் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் இந்த மின்னனு வாக்கு பதிவு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. கைரானா தொகுதி உத்தர பிரதேசத்தில் முதல்கட்ட வாக்கு பதிவின் போது தேர்தலை சந்தித்த தொகுதியாகும்.

என்ன நடந்தது?
இந்த நிலையில் தேர்தல் முடிந்த பின் அங்கு மண்டல தேர்தல் ஆணைய மேஜிஸ்டிரேட் காரில் மின்னனு வாக்கு பதிவு எந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சியினர் இந்த மின்னனு வாக்கு பதிவு எந்திரத்தை கண்டுபிடித்தனர். தேர்தல் முடிந்த பின் அந்த மின்னனு வாக்கு பதிவு எந்திரம் பாதுகாப்பான அறையில் பூட்டி வைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் மின்னனு வாக்கு பதிவு எந்திரம் அப்படி பூட்டப்படவில்லை.

காரில் இவிஎம்
மாறாக வெளியே கார் ஒன்றின் பின் பக்கம் இருந்துள்ளது. அதோடு அங்கு ஒரு போலீஸ் கூட பாதுகாப்பிற்கு இல்லை என்றும் புகார் வைக்கப்பட்டு உள்ளது. பின்னர் அங்கு வந்த மாவட்ட மேஜிஸ்டிரேட் மின்னனு வாக்கு பதிவு எந்திரம் பாதுகாப்பு இன்றி இருந்ததை பார்த்து புகாரினை பதிவு செய்தார். அம்மாவட்ட எஸ்பி மீதும் போதிய பாதுகாப்பு வழங்காத காரணத்திற்காக புகார் பதிவு செய்தார். அதேபோல் மண்டல தேர்தல் அதிகாரி மீதும் புகார் பதிவு செய்துள்ளார்.
Recommended Video

நடவடிக்கை தேவை
இந்த நிலையில்தான் மண்டல தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தேர்தல் விதிகளை மீறிவிட்டார் என்று மாவட்ட மேஜிஸ்டிரேட் மாநில தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். மின்னனு வாக்கு பதிவு எந்திரம் பாதுகாப்பிற்கு தேர்தலுக்கு பின் இப்படி கார் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications