உ.பியில் ட்விஸ்ட் எக்கச்சக்க இடங்களை இழக்கும் பாஜக.. ஆதித்யநாத்திற்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சர்வே
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அதிக அளவிலான இடங்களை இழக்கும் வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. அதாவது முந்தைய சட்டசபை தேர்தலை விட இந்த சட்டசபை தேர்தலில் பாஜக குறைவான இடங்களையே பெறும் என்று அந்த சர்வே தெரிவிக்கிறது.
உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 7வது கட்ட தேர்தல் மார்ச் 7ம் தேதி நடைபெறும். தேர்தல் முடிவுகள் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும் .
இந்த நிலையில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஏபிபி சி வோட்டர் சார்பாக கடந்த 5 மாதமாக கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்திற்கான கருத்து கணிப்பு நேற்று முதல்நாள் வெளியானது.

ஏபிபி சி வோட்டர் சர்வே
ஜனவரி மாத கணிப்புப்படி பாஜகவுக்கு 223-229 இடங்களும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 152-160 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 41.5% வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு 33.3% வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்புள்ளதாம். காங்கிரஸுக்க இந்த தேர்தலில் வெறும் 7 இடங்கள் கிடைக்கக் கூடும் என்கிறது இந்த கணிப்பு.

சமாஜ்வாதி
கடந்த 2017 சட்டசபை தேர்தலில் பாஜக வென்ற இடங்களை விட 70-96 இடங்களை இந்த முறை குறைவாக பெறும் என்று இந்த கணிப்பு தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்கள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 303 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. அங்கு பாஜக கூட்டணிக்கு அப்னா தளம் கட்சியின் 9 இடங்களையும் சேர்த்து 312 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு 49 இடங்கள் உள்ளன. பகுஜன் சமாஜ் பார்ட்டிக்கு 15 இடங்கள் உள்ளன.

பாஜக உத்தர பிரதேசம்
பாஜக 303 இடங்களில் இருந்து 229 இடங்கள் என்ற நிலையை அடையும் வாய்ப்புகள் உள்ளதாக இந்த கணிப்பு தெரிவித்துள்ளது. பாஜக சட்டசபை தேர்தலில் இந்த முறை பெரும்பான்மை பெற்றுவிடும். ஆனால் பெரும்பாலான இடங்களை அக்கட்சி இழந்துவிடும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தேர்தலில் பெற்றதை விட 90-10 இடங்கள் கூடுதலாக சமாஜ்வாதி பெறும் என்று இக்கணிப்பு தெரிவிக்கிறது. கடந்த தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாதி கட்சி பெற்ற 23.6 சதவிகித வாக்கில் இருந்து இந்த முறை 33.5 சதவிகித வாக்கை பெறும் என்று கணிப்பு தெரிவித்துள்ளது.

பாஜக வாக்கு சதவிகிதம்
பாஜக கடந்த முறை பெற்ற 42.8 சதவிகித வாக்கில் இருந்து குறைந்து இந்த முறை 41.5 சதவிகித வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது என்று இந்த கணிப்பு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 100 இடங்களை இழப்பது என்பது பாஜகவிற்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் அனுப்பப்பட்டு இருக்கும் எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது, இன்னும் தேர்தல் நடக்க ஒரு மாதம் இருப்பதால் இந்த இடங்கள் எப்படி வேண்டுமானாலும் ஸ்விங் ஆகலாம்.

உத்தர பிரதேச தேர்தல்
பாஜக இன்னும் கூடுதலாக 20-30 இடங்களை இழந்தால் மொத்தமாக தேர்தல் முடிவுகளே மாறும் வாய்ப்புகளும் உள்ளன. முக்கியமாக ஓபிசி வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் மூலம் பாஜக இழக்க போகும் இடங்களை தக்க வைக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஒரு மாதம் தேர்தல் முடிவுகளை மாற்ற போகிறது என்பதால் உ.பி களம் சூடு பிடித்துள்ளது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications