நபிகள் நாயகம் பற்றி அவதூறு? கண்டக்டரை வெட்டிய கல்லூரி மாணவன் -போலீஸ் துப்பாக்கிச்சூடு! உபியில் ஷாக்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பஸ்சில் ஏற்பட்ட தகராறில் நபிகள் நாயகம் குறித்து இழிவுப்படுத்தி பேசியதாக கூறி கண்டக்டரை கசாப்பு கடை கத்தியால் கல்லூரி மாணவர் சரமாரியாக வெட்டிய நிலையில் கைது செய்த போலீசாரையும் தாக்கியதால் துப்பாக்கியால் காலில் சுட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருபவர் லாரேப் ஹாஸ்மி (வயது 20). முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை படித்து வருகிறார்.

இந்நிலையில் தான் நேற்று இவர் கல்லூரிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ்சில் மங்க்லா யாதவ் என்பவர் டிரைவராகவும், விஸ்வகர்மா (24) என்பவர் கண்டக்டராகவும் இருந்தார்.
இந்த வேளையில் பஸ்சில் டிக்கெட் விவகாரம் தொடர்பாக கண்டக்டர் விஸ்வகர்மா மற்றும் மாணவன் லாரேப் ஹாஸ்மி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திமடைந்த லாரேப் ஹாஸ்மி தனது பேக்கில் வைத்திருந்த கசாப்பு கடை கத்தியை எடுத்து கண்டர் விஸ்வகர்மாவை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடும் பஸசில் இருந்து இறங்கி ஓடினார்.
இதனால் கண்டக்டர் விஸ்வகர்மா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு துடித்தார். இதையடுத்து டிரைவர் மங்க்லா யாதவ் அதே பஸ்சில் சகபயணிகள் உதவியுடன் அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் அவரை தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் பஸ்சில் கண்டர்கர் விஸ்வகர்மாவை லாரேப் ஹாஸ்மி கசாப்பு கடை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய ஷாக் வீடியோ வெளியானது. அதுமட்டுமின்றி லாரேப் ஹாஸ்மி தனது கல்லூரிக்கு சென்று கத்தியுடன் நடந்த சம்பவம் குறித்து பேசிய வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை அளித்தது. அதில் லாரேப் ஹாஸ்மி, ‛‛பஸ் கண்டக்டர் நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசினார். அதனால் வெட்டினேன்'' என கூறியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் அந்த கல்லூரிக்கு சென்று லாரேப் ஹாஸ்மியை அதிரடியாக கைது செய்தனர். கல்லூரியில் இருந்து அவரை அழைத்து சென்றபோது அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து போலீசார் தங்களின் பாதுகாப்பு கருதி அவரது காலில் துப்பாக்கியால் சுட்டனர். காலில் குண்டு பாய்ந்ததால் அவர் ஓடமுடியாமல் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி பிரக்யாராஜ் பகுதியில் உள்ள யமுனாநகர் துணை போலீஸ் கமிஷனர் அபினவ் தியாகி கூறுகையில், ‛‛பஸ் கண்டக்டரை தாக்கிய நபரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரைண நடத்தி வருகிறோம்'' என்றார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications