Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்வமாக பிரச்சாரத்திற்கு வந்த உ.பி பாஜக எம்எல்ஏ.. மாட்டு சாணத்தை வீசி! கல் எறிந்து! துரத்திய மக்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக எம்எல்ஏ ஒருவர் மீது அங்கு இருந்த மக்கள் மாட்டு சாணத்தை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    ஆர்வமாக பிரச்சாரத்திற்கு வந்த உ.பி பாஜக எம்எல்ஏ.. மாட்டு சாணத்தை வீசி! கல் எறிந்து! துரத்திய மக்கள்

    உத்தர பிரதேசத்தில் இன்று முதல்கட்ட சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள 58 தொகுதிகளில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது.

    மொத்தம் 11 மாவட்டங்களில் இந்த சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு 48 மணி நேரங்களுக்கு முன்பாக உத்தர பிரதேசத்தில் உள்ள இந்த 58 தொகுதிகளிலும் பிரச்சார கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

    உத்தர பிரதேச பிரச்சாரம்

    உத்தர பிரதேச பிரச்சாரம்

    கடந்த 1 மாதமாக இந்த 11 மாவட்டங்களில் தீவிரமாக பிரச்சாரங்கள் நடந்து வந்தது. இந்த 11 மாவட்டங்கள் இஸ்லாமியர்கள் மற்றும் ஜாட் இன விவசாயிகள் அதிகம் வசிக்கும் மாவட்டங்கள் ஆகும். இஸ்லாமியர்கள் ஏற்கனவே இங்கு பாஜக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அதேபோல் ஜாட் இன மக்களும் விவசாய போராட்டங்கள் காரணமாக பாஜக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

    பாஜக எம்எல்ஏ விரட்டி அடிப்பு

    பாஜக எம்எல்ஏ விரட்டி அடிப்பு

    இதனால் இங்கு பிரச்சாரம் செய்ய செல்லும் பாஜக வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய செல்லும் போது பொது மக்கள் அவர்களை விரட்டி அடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. முன்னதாக முசாபர்நகரில் உள்ள கட்டௌலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் சைனி அங்கு பிரச்சாரம் செய்ய சென்ற போது பொது மக்கள் மூலம் விரட்டி அடிக்கப்பட்டார். ஜாட் பிரிவினரும், இஸ்லாமியர்களும் இணைந்து பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் சைனியை விரட்டி அடித்தனர்.

    உத்தர பிரதேசம் தேர்தல்

    உத்தர பிரதேசம் தேர்தல்

    உத்தர பிரதேசத்தில் பாஜக எம்வி மனோஜ் திவாரி பிரச்சாரம் செய்ய சென்ற போது அவருக்கு எதிராக பொது மக்கள் செருப்பை தூக்கி காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நொய்டாவில் பாஜக எம்எல்ஏ பங்கஜ் சிங்கிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாஜக எம்பி மனோஜ் திவாரி சென்ற போது சம்பவம் நடைபெற்றது.இந்த நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் மற்றும் எம்எல்ஏ சஹிந்தர் சிங் பிரச்சாரம் செய்ய செல்லும் போது பொது மக்களால் விரட்டி அடிக்கப்பட்டார்.

    மாட்டு சாணம்

    மாட்டு சாணம்

    இன்று தேர்தல் நடக்கும் பாக்பாத் மாவட்டத்தில் உள்ள சாப்பராலி தொகுதியில் இவர் போட்டியிடுகிறார். அங்கு இவர் பிரச்சாரம் செய்ய சென்ற போது மக்கள் சிலர் இவரை நோக்கி மாட்டு சாணத்தை வீசி போராட்டம் செய்துள்ளனர். ஆர்எல்டி கட்சியினர் வலுவாக இருக்கும் பகுதியாகும் இது. இந்த நிலையில் சஹிந்தர் சிங் அங்கு பிரச்சாரம் செய்த போது அவரின் காரை மறித்த மக்கள் அதில் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    கல் எறிந்து தாக்குதல்

    கல் எறிந்து தாக்குதல்

    அதன்பின் அவரின் கார் மீது மாட்டு சாணத்தை வீசி எறிந்துள்ளனர். இதில் சஹிந்தர் சிங் மீது மாட்டு சாணம் பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சஹிந்தர் சிங் தனது வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக அங்கிருந்து சென்றார். பாஜக எம்எல்ஏக்களுக்கு எதிராக பல இடங்களில் அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அப்ஹா சௌத்ரிஉத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு நடக்கிறது. 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 620க்கும் அதிமானோர் முதற்கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்கு முனை போட்டி நடக்கிறது. நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 58 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள்:


    வ.எண் தொகுதி வேட்பாளர் பெயர்
    சமாஜ்வாதி பாஜக காங்கிரஸ் பகுஜன் சமாஜ்
    1 கைரானா நஹித் ஹசன் மிரிகங்கா சிங் ஹாஜி அக்லாக் ராஜேந்திர சிங் உபாத்யாய்
    2 தானா பவன் அஷ்ரப் அலி சுரேஷ் ராணா சத்யா சய்யம் சைனி ஜாகீர் மாலிக்
    3 ஷாம்லி பிரசன்ன சவுத்ரி தேஜேந்திர சிங் நிர்வால் முகமது அயூப் ஜங் பிரிஜேந்திர மாலிக்
    4 புதானா ராஜ்பால் பலியன் உமேஷ் மாலிக் தேவேந்திர காஷ்யப் ஹாஜி முகமது அனிஷ்
    5 சார்தவால் பங்கஜ் கே.ஆர். மாலிக் சப்னா காஷ்யப் டாக்டர். யாஸ்மீன் ராணா சல்மான் சயீத்
    6 புர்காசி (ரிசர்வ்) அனில் குமார் பிரமோத் உத்வால் தீபக் குமார் சுரேந்திர பால் சிங்
    7 முஸாப்பர்நகர் சௌரப் கபில் தேவ் அகர்வால் சுபோத் சர்மா புஷ்பங்கர் பால்
    8 கத்தவ்லி ராஜ்பால் சிங் சைனி விக்ரம் சைனி கௌரவ் பதி கர்தார் சிங் பதனா
    9 மீராப்பூர் சந்தன் சவுகான் பிரசாந்த் குர்ஜார் மௌலானா ஜமீல் க்காஸ்மி முகமது சலீம்
    10 சிவல்கஸ் குலாம் முகமது மனேந்திர பால் சிங் ஜகதீஷ் சர்மா நன்ஹே கான்
    11 ஷ‌ர்தனா அதுல் சங்கீத் சோம் சையத் ரியானுதீன் சஞ்சீவ் குமார் தாமா
    12 ஹஸ்தினாபூர் (ரிசர்வ்) யோகேஷ் வெர்மா தினேஷ் கதிக் அர்ச்சனா கவுதம் சஞ்சீவ் கே.ஆர். ஜாதவ்
    13 கித்தோர் ஷாஹித் மஞ்சூர் சத்யவீர் தியாகி பபிதா குர்ஜர் குஷால் பால் மாவி
    14 மீரட் கண்ட் மனிஷா அஹ்லாவத் அமித் அகர்வால் அவனிஷ் கஜாலா அமித் சர்மா
    15 மீரட் ரஃபிக் அன்சாரி கமல் தத் சர்மா ரஞ்சன் சர்மா முகமது தில்ஷத்
    16 மீரட் தெற்கு முகமது அடில் சோமேந்திர டோமர் நஃபீஸ் சைஃபி குன்வர் தில்ஷத் அலி
    17 சப்ரவ்வுளி அஜய் குமார் சஹேந்திர சிங் ரம்லா டாக்டர் யூனுஸ் சவுத்ரி ...
    18 பரெள‌த் ஜெய்வீர் சிங் டோமர் கிருஷ்ணபால் சிங் மாலிக் ராகுல் காஷ்யப் அங்கித் சர்மா
    19 பாக்பத் அஹ்மத் ஹமீத் யோகேஷ் தாமா அனில் தேவ் தியாகி அருண் கசானா
    20 லோனி மதன் பையா நந்த்கிஷோர் குர்ஜர் யாமீன் மாலிக் ஹாஜி ஆகில் சவுத்ரி
    21 முராத்நகர் சுரேந்திர குமார் அஜித் பால் தியாகி பிஜேந்திர யாதவ் ஹாஜி அய்யூப் இத்ரிஷி
    22 ஷாஹிபாபாத் அமர்பால் சுனில் சர்மா சங்கீதா தியாகி அஜீத் கே.ஆர். பால்
    23 காஸியாபாத் விஷால் வெர்மா அதுல் கார்க் சூஷன் கோயல் கிருஷ்ண குமார் சுக்லா
    24 மோடி நகர் சுதேஷ் சர்மா மஞ்சு சிவாச் நீரஜ் குமாரி டாக்டர் பூனம் கர்க்
    25 தௌலானா அஸ்லாம் அலி தர்மேஷ் டோமர் அரவிந்த் சர்மா வாசித் பிரதான்
    26 ஹபூர் (ரிசர்வ்) கஜ்ராஜ் சிங் விஜய் பால் ஆட்தி பாவனா வால்மீகி மனிஷ் கே.ஆர். மோனு
    27 கர்முக்டேஷ்வர் ரவீந்திர சவுத்ரி ஹரேந்திர சவுத்ரி அப்ஹா சௌத்ரி மதன் சௌஹான்
    28 நொய்டா சுனில் சவுத்ரி பங்கஜ் சிங் பன்குரி பதக் கிரிபரம் சர்மா
    29 தாத்ரி ராஜ்குமார் தேஜ்பால் சிங் நகர் தீபக் பாதி சோட்டிவாலா மன்வீர் சிங் பாதி
    30 ஜேவார் அவ்தார் சிங் பதானா திரேந்திர சிங் மனோஜ் சவுத்ரி நரேந்திர பாதி தாதா
    31 சிக்கந்த்ராபாத் ராகுல் யாதவ் லக்ஷ்மிராஜ் சிங் சலீம் அக்தர் சௌத்ரி மன்வீர் சிங்
    32 புலந்த்ஷஹர் ஹாஜி யூனுஸ் பிரதீப் சவுத்ரி சுஷில் சவுத்ரி மொபின் கல்லு குரைஷி
    33 சைய‌னா தில்நவாஜ் கான் தேவேந்திர சிங் லோதி பூனம் பண்டிட் சுனில் பரத்வாஜ்
    34 அனுப்ஷஹர் கே.கே சர்மா சஞ்சய் ஷர்மா சவுத்ரி கஜேந்திரா ராமேஷ்வர் சிங் லோதி
    35 தேபாய் ஹரிஷ் குமார் சி பி சிங் சுனிதா சர்மா கரண் பால் சிங்
    36 ஷிகர்பூர் கிரண் பால் சிங் அனில் சர்மா ஷியாவுர் ரஹ்மான் முகமது ரஃபிக்
    37 குர்ஜா (ரிசர்வ்) பன்ஷி சிங் மீனாட்சி சிங் துக்கி மால் காதிக் வினோத் குமார் ஜாதவ்
    38 கைர் (ரிசர்வ்) பகவதி சூர்யவன்ஷி அனூப் பால்மிகி மோனிகா சூர்யவன்ஷி சாருகென் கென்
    39 பாரௌலி பிரமோத் கவுர் தாக்கூர் ஜெய்வீர் சிங் கௌரங் தேவ் சவுகான் நரேந்திர ஷர்மா
    40 அட்ரெளலி வீரேஷ் யாதவ் சந்தீப் சிங் தர்மேந்திர குமார் டாக்டர் ஓம்வீர் சிங்
    41 ச்ச‌ர்ரா லக்ஷ்மி தங்கர் ரவேந்திர பால் சிங் அகிலேஷ் சர்மா திலக் ராஜ் யாதவ்
    42 கோயில் ஷாஸ் இஷாக் அனில் பராஷர் விவேக் பன்சால் முகமது பிலால்
    43 அலிகர் ஜாபர் ஆலம் முக்தா ராஜா முகமது சல்மான் இம்தியாஸ் ரசியா கான்
    44 இக்லஸ் (ரிசர்வ்) பீர்பால் சிங் திவாகர் ராஜ்குமார் சஹ்யோகி ப்ரீத்தி தங்கர் சுஷில் கே.ஆர் ஜாதவ்
    45 ச்சட்டா தேஜ்பால் சிங் லக்ஷ்மி நாராயண் பூனம் தேவி சோன்பால் சிங்
    46 மன்ட் சஞ்சய் லதர் ராஜேஷ் சவுத்ரி சுமன் சவுத்ரி ஷியாம் சுந்தர் சர்மா
    47 கோவர்தன் ப்ரீதம் சிங் மெக்ஷ்யாம் சிங் தீபக் சவுத்ரி ராஜ் குமார் ராவத்
    48 மதுரா தேவேந்திர அகர்வால் ஸ்ரீகாந்த் ஷர்மா பிரதீப் மாத்தூர் சதீஷ் கே.ஆர் சர்மா
    49 பல்தேவ் (ரிசர்வ்) பபிதா தேவி பூரன் பிரகாஷ் ஜாதவ் வினேஷ் குமார் அசோக் கே.ஆர் சுமன்
    50 எத்மட்பூர் டாக்டர் வீரேந்திர சிங் தரம்பால் சிங் ஷிவானி சிங் பாகேல் சர்வேஷ் பாகேல்
    51 ஆக்ரா கண்ட். (ரிசர்வ்) குன்வர் சந்த் ஜி.எஸ் தர்மேஷ் சிக்கந்தர் வால்மீகி பர்தேந்து அருண்
    52 ஆக்ரா தெற்கு வினய் அகர்வால் யோகேந்திர உபாத்யாயா அனுஜ் சர்மா ரவி பரத்வாஜ்
    53 ஆக்ரா வடக்கு ஞானேந்திரா புருஷோத்தம் கந்தேல்வால் வினோத் கே.ஆர். பன்சால் ஷபீர் அப்பாஸ்
    54 ஆக்ரா ரூரல் (ரிசர்வ்) மகேஷ் குமார் ஜாதவ் பேபி ராணி மௌரியா உபேந்திர சிங் கிரண் பிரபா கேசரி
    55 ஃபதேபூர் சிக்ரி பிரிஜேஷ் சாஹர் சௌத்ரி பாபுலால் ஹேமந்த் சாஹர் டாக்டர் முகேஷ் கே.ஆர் ராஜ்புத்
    56 கெரகர்க் ரௌத்தன் சிங் பகவான் குஷ்வாஹா ராம்நாத் ஷிகர்வார் கங்காதர் குஷ்வாஹா
    57 ஃபதேஹாபாத் ரூபாலி தீட்சித் சோடேலால் வெர்மா ஹோதம் சிங் நிஷத் சைலேந்திர பிரதாப் சிங்
    58 பாஹ் மதுசூதன் ஷர்மா ராணி பக்ஷலிகா மனோஜ் தீட்சித் நிதின் வெர்மா

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+