Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 மணி நேரத்தில் 5 எம்எல்ஏ காலி.. அதிர்ந்த ஆதித்யநாத்.. பாஜகவை திணறடித்த அகிலேஷ் - எப்படி நடந்தது?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நேற்று வெறும் 4 மணி நேரத்தில் 1 அமைச்சர் உட்பட 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாஜகவிற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.முக்கியமாக ஓசி பிரிவினர் இடையே பெரிய ஆதரவை பெற்று இருக்கும் பாஜக சமீபத்திய அரசியல் மாற்றங்களால் ஓபிசி பிரிவினரின் வாக்குகளை, ஆதரவை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. உத்தர பிரதேச அரசியலில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்...

உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என்று பல கட்சிகள் இருந்தாலும் சமாஜ்வாதி, பாஜக இடையேதான் அங்கே முக்கிய போட்டி நிலவி வருகிறது.

மாற்றம்

மாற்றம்

இப்படிப்பட்ட நிலையில்தான் தேர்தலுக்கு 1 மாதத்திற்கு முன்பாக 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சிக்கு தாவி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் மிக முக்கியமான ஓபிசி பிரிவு தலைவர்கள். ஸ்வாதி பிரசாத் மவுரியா என்ற மூத்த அமைச்சர் மற்றும் ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாத்பதி, பகவதி சாகர், வினய் சாக்யா ஆகிய எம்எல்ஏக்கள் நேற்று பாஜகவில் இருந்து வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். நேற்று மாலை வெறும் 4 மணி நேரத்தில் இந்த 5 பேர் பாஜகவில் இருந்து வெளியேறி சமாஜ்வாதியில் ஐக்கியம் ஆனார்கள்.

ஓபிசி லீடர்

ஓபிசி லீடர்

இது பாஜகவிற்கு ஏன் பின்னடைவை கொடுக்கிறது என்றால், வெளியேறிய 5 பேரும் வலுவான ஓபிசி தலைவர்கள். உத்தர பிரதேசத்தில் பாஜக ஒரு ஓசி பிரிவினருக்கான கட்சி என்ற பிம்பம் உள்ளது. ஆனால் அதையும் மீறி பாஜக ஓபிசி பிரிவு வாக்குகளையும், எஸ்டி/எஸ்சி பிரிவு மக்களின் வாக்குகளையும் பெற அக்கட்சியில் இருக்கும் சில தலைவர்களே காரணம்.மாவட்ட அளவில் வலுவாக இருக்கும் சில ஓபிசி, எஸ்டி/எஸ்சி தலைவர்கள் மூலம்தான் பாஜக ஓபிசி, எஸ்டி/எஸ்சி வாக்குகளை வாங்கி வந்தது. ஆனால் இப்போது அதற்குத்தான் அகிலேஷ் யாதவ் வேட்டு வைத்து இருக்கிறார்.

அகிலேஷ் குறி

அகிலேஷ் குறி

சரியாக குறி வைத்து பாஜகவில் இருந்து ஓபிசி பிரிவு தலைவர்களை அகிலேஷ் யாதவ் தூக்கி வருகிறார். சமாஜ்வாதி கட்சி ஓபிசி பிரிவினர் இடையே அதிக ஆதரவு கொண்ட கட்சி. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவில் இருந்து முக்கிய ஓபிசி தலைவர்களை தட்டி தூக்கி.. பாஜகவின் வாக்கு வங்கியை சரிக்கும் முயற்சியில் அகிலேஷ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதில் கடந்த 3 மாதத்தில் வெற்றியும் கண்டுவிட்டார். ஆம் கடந்த 3 மாதத்தில் மட்டும் 10 ஓபிசி, எஸ்டி/எஸ்சி பிரிவு தலைவாக்ரள் பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சமாஜ்வாதியில் இணைந்து உள்ளனர்.

அகிலேஷ் பிளான்

அகிலேஷ் பிளான்

இஸ்லாமிய வாக்குகள் பாஜகவிற்கு செல்லாது. எஸ்டி/எஸ்சி பிரிவினர் வாக்குகளும் செல்லாது. பாஜகவிற்கு சிதறும் ஒரு சில ஓபிசி, எஸ்டி/எஸ்சி வாக்குகளையும் தன் பக்கம் இழுத்தால் தேர்தல் முடிவுகள் மாறும் என்று அகிலேஷ் யாதவ் கருதுகிறார். அதில் நிறைய உண்மையும் இருக்கிறது. இப்போது பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்த 5 பேருமே இதற்கு முன் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்று அங்கு இருந்து சமாஜ்வாதி கட்சியில் தற்போது இணைந்துள்ளனர்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

கட்சிக்குள் பல வேறுபாடுகளை கடந்து நாங்கள் உழைத்து வந்தோம். ஆனால் தலித் மற்றும் ஓபிசி தலைவர்களுக்கு போதிய மரியாதை இல்லை. தலித், ஓபிசி, விவசாயிகளுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டது. அதனால் நாங்கள் வெளியேறுகிறோம். நாங்கள் வெளியேறுவதால் தேர்தல் முடிவுகளில் என்ன மாதிரியான மாற்றம் வரும் என்பதை நீங்கள் தேர்தல் முடிவு வரும் போது உணர்வீர்கள்.. பாஜக தவறு இழைத்துவிட்டது என்று பாஜகவில் இருந்து வெளியேறிய 5 பேரும் தெரிவித்துள்ளனர்.

 எப்படி சாத்தியம் ஆனது?

எப்படி சாத்தியம் ஆனது?

அகிலேஷ் யாதவ் இப்படி 5 பாஜக தலைகளை தட்டி தூக்கியது கடந்த 1 வருட பிளான் என்கிறார்கள். இது தொடக்கம்தான் இன்னும் 10-12 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து வெளியேறும் சூழ்நிலை நிலவுகிறது. இந்த தேர்தலில் ஸ்விங் வாக்குகள் என்றால் அது ஓபிசி வாக்குகள்தான். அதைத்தான் அகிலேஷ் யாதவ் பெற போகிறார் என்கிறார்கள். பாஜகவிற்குள் ஓபிசி தலைவர்கள் ஓரம்கட்டப்படுவதை உணர்ந்து அவர்களிடம் 1 வருடமாக பேசி சமாஜ்வாதி கட்சிக்கு அகிலேஷ் இழுத்து இருக்கிறார் என்று உ.பி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமித் ஷா கேட்டார்

அமித் ஷா கேட்டார்

இந்த முடிவு பாஜகவின் மேலிடத்திற்கு 1 மாத்திற்கு முன்பே தெரியும். அமித் ஷா மூலம் இவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆதித்யநாத் மீது உள்ள அதிருப்தியும் இப்படி பாஜக எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி பக்கம் செல்ல முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஓபிசி தலைவர்களின் இந்த திடீர் முடிவால் ஆதித்யநாத் கொஞ்சம் கலங்கி போய் இருப்பதாக உபி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+