திருமணத்திற்கு ஹெலிகாப்டரில் என்ட்ரி.. பாட்டியின் 18 ஆண்டு ஆசையை நிறைவேற்ற மாப்பிள்ளை செய்த சம்பவம்
லக்னோ: பாட்டியின் 18 ஆண்டு ஆசையை நிறைவேற்றவும், பாட்டிக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவும் மணமகன் ஒருவர் தனது வருங்கால மனைவியை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து திருமணம் செய்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 'விஜய் டிவி'யில் கோபிநாத் தொகுத்து வழங்கும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் இளம்பெண்கள் பங்கேற்று பேசினர். தங்களின் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று ஒவ்வொருவவரும் விவரித்தனர்.
இளம்பெண் ஒருவர் ''திருமணத்தின்போது மாப்பிள்ளையும், பொண்ணும் வேறு ஒரு 'என்ட்ரி'யில் வந்தால் நல்லா இருக்கும். ஒரு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினால் நன்றாக இருக்கும்'' எனக்கூறி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார். அதன்பிறகு சமூக வலைதளங்களில் ட்ரோலுக்கும் உள்ளானார்.
ஆனால் அந்த இளம்பெண் சொன்னது போலவே திருமணத்தின்போது ஒரு மாப்பிள்ளையும், பெண்ணும் ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் என்ட்ரி ஏற்பாடு என்பது அவர்களிடம் இருக்கும் பணபலத்தையும், வசதியையும் காட்டுவதற்காக செய்யப்படவில்லை. மாறாக மணமகனின் பாட்டியின் 18 ஆண்டு கனவை நனவாக்கவும், பாட்டிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுவாரசிய சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டம் சிவால் காஸ் பகுதியை சேர்ந்தவர் ஜாஹித் ராணா. இவரது மகன் பெயர் ஹிரா ராணா. இவருக்கும் ஹாப்பூர் மாவட்டத்தின் தவ்லானா அருகே தேஹ்ரா கிராமத்தை சேர்ந்த ஹஸ்மத் ராணா என்பவரின் மகள் காஷிபா ராணிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்பிறகு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. திருமணத்தை தேரா கிராமத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் மணமகன் ஹிரா ராணாவின் பாட்டி தான்.
ஹிரா ராணாவின் பாட்டிக்கு தேரா கிராமத்தில் தான் திருமணம் நடந்தது. அதுபோல் பேரணுக்கும் அந்த கிராமத்தில் தான் திருமணத்தை நடத்த வேண்டும். இந்த திருமணத்தின்போது பேரன் தனது வருங்கால மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்க வேண்டும் என பாட்டி கூறினார். இதனால் மாப்பிள்ளை ஹிரா ராணா தனது பாட்டியின் கனவையும், அவரது தந்தையான ஜாஹித் ராணா தனது தாயின் கனவையும் நிறைவேற்ற முடிவெடுத்தனர்.
அதன்படி ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தனர். மீரட்டில் இருந்து மணமகன் ஹிரா ராணா, மணமகள் காஷிபா ராணி ஆகியோர் ஹெலிகாப்டரில் தேரா கிராமத்துக்கு என்ட்ரி கொடுத்தனர். அங்கு கோலாகலமாக திருமணம் நடந்தது. அதன்பிறகு மீண்டும் மணமக்கள் ஹெலிகாப்டரில் ஏறி மீரட்டுக்கு சென்றனர். இதன்மூலம் ஹிரா ராணா தனது பாட்டியின் 18 ஆண்டு கால கனவை நிறைவேற்றினார்.
दुल्हन लेने हेलीकॉप्टर से पहुंचा दूल्हा! दादी का 18 साल पुराना सपना हुआ पूरा!उत्तर प्रदेश के हापुड़ में एक अनोखी शादी चर्चा का विषय बनी हुई है। मेरठ के दूल्हे हीरा राणा हेलीकॉप्टर से बारात लेकर धौलाना के गांव देहरा पहुंचे। दरअसल, उनकी दादी का 18 साल पुराना सपना था कि पोते की बारात हेलीकॉप्टर से आए। हीरा राणा ने दादी की यह ख्वाहिश पूरी की और शादी के बाद दुल्हन को भी हेलीकॉप्टर से विदा कराकर ले गए। इस अनोखी शादी की गांव में खूब चर्चा हो रही है।#Hapur #HelicopterWedding #UniqueWedding #UttarPradesh #upnews #naxatrasamachar
— Naxatra Samachar (@NaxatraSamachar) November 13, 2026
முன்னதாக தேரா கிராமத்தில் மணமக்கள் வந்து இறங்கிய செய்தி கேட்டதும், கிராமத்தில் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். ஹெலிகாப்டரையும், ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மணமகன் - மணப்பெண்ணையும் அவர்கள் பார்த்து சென்றனர். இந்த சம்பவம் அன்றைய தினம் தேரா கிராமத்தில் பெரும் பேசும்பொருளானது.


Click it and Unblock the Notifications
