பெற்ற மகளையே.. ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. உ.பி.யில் பகீர் சம்பவம்
லக்னோ: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை, உத்தரகாண்ட் செவிலியர் பாலியல் கொலை என்று கடந்த சில வாரங்களாக திரும்பிய பக்கமெல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன் மகளை அப்பாவே ஓராண்டுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்தே நாடு வெளிவரவில்லை. ஆனால் அதற்குள் நாமு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், கோவை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் அரைகுறை ஆடையுடன் அநாகரீகமாக நடந்து கொள்ள முயற்சித்த இளைஞர் என்று பாலியல் குற்றங்களில் இருந்து எந்த மாநிலங்களுக்கும் விலக்கு இல்லை. அந்த வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் பெண்களுக்கு எதிராக அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி 17 வயது சிறுமியை, அவரின் அப்பாவே பாலியல் வன்கொடுமை செய்த அக்கிரமம் நடந்துள்ளது. அதுவும் ஒரு முறை, இரண்டு முறை அல்ல கடந்த ஒரு வருடமாக அப்பாவே தன் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை நடந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அந்த நபர் மீது அவரின் மனைவியும், சிறுமியின் அம்மாவுமான பெண் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை ) காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சரக அலுவலர் அன்ஜனி குமார் சதுர்வேதி கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று (சனிக்கிழமை) கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார். மனைவி அளித்த புகார் மனுவில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தனது மகளை, தன்னுடைய கணவரை கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பல தருணங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் இதை யாரிடமும் சொல்ல முடியாமல், தன் கணவரிடம் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது அந்த நபர் தன் மனைவிக்கு முத்தலாக் கொடுத்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். அதன்பிறகு தான் அநதப் பெண் தன் கணவரின் வக்கிர செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அமேதி மாவட்டம் அருகே 13 வயது சிறுமியை அவரின் அப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சிறுமியின் அம்மா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் சிறுமியின் அம்மா உயிரிழந்துள்ளார். ஒருபக்கம் அம்மாவின் இழப்பு, மறுபக்கம் அப்பாவின் வன்கொடுமை செயலில் அந்த சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டார்.
சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு பிறகு அந்த சிறுமி, தன் அப்பா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸ், சிறுமியின் அப்பாவை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சம்பவம் நடந்த சில நாட்களில், அப்பாவால் மற்றொரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications