நெஞ்சே பதறுதே.. தங்கையின் தலையை வெட்டி ஊர்வலம் போன அண்ணன்! நடுங்கிய உத்தர பிரதேசம்!ஷாக் பின்னணி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சொந்த தங்கையை தலையை வெட்டி கொலை செய்த அண்ணன், அவரது தலையை கையில் வைத்து ஊர்வலமாக சென்றதும், அவர் இந்த கொலையை செய்ததன் பின்னணியில் உள்ள காரணமும் நெஞ்சை பதறவைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்தவர் ரியாஸ் (வயது 22). இவரது தங்கை ஆசிபா (வயது 18). இந்நிலையில் தான் ஆசிபாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சந்த் பாபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.

இருப்பினும் கூட ஆசிபா மற்றும் சந்த் பாபு ஆகியோர் நட்பாக பழகியுள்ளனர். இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இதுபற்றி ஆசிபாவின் குடும்பத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் காதலை கைவிடும்படி கூறியுள்ளனர்.
ஆனால் ஆசிபா காதலை கைவிடவில்லை. இதற்கிடையே தான் ஆசிபா கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன் சந்த் பாபுவுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிபாவின் குடும்பத்தினர் அவரை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஆசிபாவை மீட்ட போலீசார் சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆசிபாவுக்கும் அவரது சகோதரர் ரியாசுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த பிரச்சனை முற்றவே ஆத்திரமடைந்த ரியாஸ் கூரிய ஆயுதத்தை எடுத்த ஆசிபாவின் கழுத்தை வெட்டி கொன்றார். மேலும் உடலில் இருந்து தலையை துண்டாக்கிய ரியாஸ் அதனை தனது கையில் வைத்து கொண்டு ஊர்வலமாக அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.

ஆசிபாவின் தலையுடன் வந்த ரியாஸை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ரியாஸ் தனது சகோதரி ஆசிபாவின் தலையுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்து செல்லும் போட்டோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அஸ்டோஸ் மிஸ்ரா கூறுகையில், ‛‛ரியாஸ் தனது சகோதரியின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications