21 ஆண்டுகளாக உல்லாசம்.. திருமண ஆசைக்காட்டி 36 வயது நர்சை பலாத்காரம் செய்த 59 வயது நபர்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி 21 ஆண்டுகளாக நர்சை பாலியல் பலாத்காரம் செய்து வந்த லேப் டெக்னீசியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பதோகி மாவட்டத்தை சேர்ந்தவர் சிந்தாமணி சர்மா (வயது 59). இவர் பதோகியில் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார்.

சிந்தாமணி சர்மா லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் 36 வயது நிரம்பிய நர்ஸாக பணியாற்றும் பெண்ணுக்கும் சிறு வயதில் இருந்தே பழக்கம் இருந்தது.
சிந்தாமணி சர்மா மற்றும் 36 வயது நிரம்பிய நர்ஸ் ஆகியோர் சிறுவயதில் வாரணாசியில் வசித்தனர். இருவரின் குடும்பமும் ஒரே அபார்ட்மெண்ட்டில் தனித்தனி வீடுகளில் இருந்தனர். அப்போது சிந்தாமணி சர்மா, நர்ஸ் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக உதவினார். அதுமட்டுமின்றி நர்ஸின் படிப்புக்கும் உதவி செய்து வந்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
முதலில் அவர்கள் நண்பர்களாக பழகினர். அதன்பிறகு அவர்கள் இடையேயான உறவு என்பது இன்னும் நெருக்கமாகி உள்ளது. சிறுவயது என்பதால் அவரை சிந்தாமணி சர்மா மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். இதனால் அவர் வெளியே சொல்லவில்லை.
அதன்பிறகு சில ஆண்டுகளுக்கு பிறகு பிளானை மாற்றிய சிந்தாமணி சர்மா, திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பிறகு அவர் நர்ஸை திருமணம் செய்து கொள்ளாமல் ரகசியமாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகும் கூட தனது திருமணத்தை மறைத்து நர்ஸிடம் அவர் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதற்கிடையே தான் நர்ஸுக்கு உண்மை தெரியவந்தது.
இதுபற்றி நர்ஸ் கேட்டதற்கு சிந்தாமணி சர்மா அவரை அடித்து துன்புறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி அவரது வீட்டை சூறையாடி உள்ளார். இதனால் மனம் நொந்துபோன நர்ஸ் தனக்கு திருமண ஆசை காட்டி 21 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிந்தாமணி சர்மா மீது போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்தமாணி சர்மாவை கைது செய்தனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications