லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் கிட்ட வாங்க.. வெறும் ரூ. 55,000தான்.. அதிர வைத்த உ.பி. போஸ்டர்.. அடி வயிறு கலங்குதே!

ரவுடி ஒட்டிய போஸ்டரால் உபியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

லக்னோ: யாரையாவது கொலை பண்ணனுமா, என்கிட்ட சொல்லுங்க.. ஜஸ்ட் 55 ஆயிரம் ரூபாய்தான் என்று ஒரு இளைஞன் போஸ்டர் அடிக்கும் அளவுக்கு உபியின் அராஜகம் நிறைந்து வழிந்துள்ளது!

உத்தரபிரதேசத்தை நினைத்தாலே ஈரக்குலை நடுங்குகிறது.. கொஞ்ச நாளாகவே அங்கு வன்முறைகள் பேயாட்டம் ஆடி கொண்டிருக்கிறது.. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அளவுக்கு அதிகமாக நடந்து வருகிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு நிச்சயமே இல்லாமல் போய்விட்டது.

கடந்த 2019-ம் வருடத்தில் ஜனவரி முதல் ஜூலை வரை 2,204 கொலைகள் நடந்துள்ள அளவுக்கு அந்த மாநிலம் படுபயங்கரத்தில் உள்ளது.. தங்கள் மாநிலத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கிறோம் என்று யோகி உறுதி தந்தாலும், நடந்து வரும் சம்பவங்கள் அப்படி பிரதிபலிக்கவில்லை.

 மேட்டரே வேறயாம்.. அவசரப்பட்ட எஸ்.ஏ.சி.. அதிரடியாக களம் குதித்த விஜய்.. நடந்தது இதுதானாமே! மேட்டரே வேறயாம்.. அவசரப்பட்ட எஸ்.ஏ.சி.. அதிரடியாக களம் குதித்த விஜய்.. நடந்தது இதுதானாமே!

 உபியில் கிலி

உபியில் கிலி

இதற்கு முத்தாய்ப்பாக உபி ரவுடி ஒருவர், அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் சர்ச்சையையும் கிலியையும் தந்து வருகிறது.. அந்த போஸ்டர் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது.. "யாரையாவது மிரட்ட வேண்டுமா ரூ. 1000, அடிக்க வேண்டுமா ரூ.5,000, யாரையாவது அடித்து தாக்கி காயப்படுத்த வேண்டுமா ரூ.10,000, ஒருத்தரை கொலை செய்ய ரூ.55,000 வசூலிக்கப்படும்" என்று அச்சிடப்பட்டுள்ளது.. முதல்முறையாக கொலை செய்ய விலைப்பட்டியல் போட்ட மாநிலம் உபிதான்.

விலைப்பட்டியல்

விலைப்பட்டியல்

காய்கறி கடையில் லிஸ்ட் எழுதி ஒட்டியிருப்போமே, அதே மாதிரி ஒரு விலைப்பட்டியலை அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது.. மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது.. அதற்கு பக்கத்திலேயே ஒரு இளைஞர் கருப்பு கலர் டிரஸ் அணிந்து, கையில் துப்பாக்கி வைத்திருக்கிறார்.

 ராணுவ வீரர்

ராணுவ வீரர்

இப்படி ஒரு போஸ்டரை பார்த்ததுமே மக்கள் கொந்தளித்து விட்டனர்.. சோஷியல் மீடியாவில் இந்த போஸ்டர் பெரும் வைரலானது.. இதையடுத்து போலீசார் அந்த போஸ்டர் யார் அடித்து ஒட்டியது என்ற விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான், சவுக்கடா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அச்சடித்து ஒட்டியிருப்பதை கண்டுபிடித்தனர்.. இதில் கொடுமை என்னவென்றால், அந்த இளைஞர் ஒரு ராணுவ வீரரின் மகனாம்.

 தொழில் போட்டியா?

தொழில் போட்டியா?

இளைஞர் உட்பட சம்பந்தப்பட்ட அந்த கும்பலின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, இப்படி போஸ்டர் அடித்து ஒட்டியதற்கு காரணம், தொழில் போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.. இல்லையென்றால், இந்த அளவுக்கு பகிரங்கமாக ரேட் பட்டியலிட்டு நோட்டிஸ் ஒட்டியிருக்க மாட்டார்கள் என்கிறார்கள்.

இதற்கு என்ன காரணமாக இருந்தாலும் சரி, ராமராஜ்ஜியம் மலரும் என்று சொன்ன பூமியில், கொலை செய்ய துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு போஸ்டர் அடித்து ஒட்டுவது ஏற்க முடியவில்லை!

English summary
Uttar Pradesh Muzaffarnagar gangsters post rate list
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X