5 கிலோ உருளைக்கிழங்கு லஞ்சம் கேட்ட உ.பி போலீஸ் – வெளியான ஆடியோ.. அங்க ஒரு டிவிஸ்ட்
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஒருவர் 5 கிலோ உருளைக்கிழங்கு லஞ்சம் கேட்டதாக பகீர் ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதில் உருளைக்கிழங்கு என்கிற வார்த்தையில் ஒரு டிவிஸ்ட் உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பவல்புர் சபுன்னா சௌகி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராம் கிருபால் சிங். இவர் விவசாயி ஒருவரின் பிரச்னைக்காக, அவரிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அதில் ராம் கிருபால் விவசாயியிடம் அவரின் கோரிக்கையை நிறைவேற்ற 5 கிலோ உருளைக்கிழங்கு வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு விவசாயி 5 கிலோ முடியாது 2 கிலோ உருளைக்கிழங்கு தருகிறேன் என்று கூறுகிறார்.

இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதமாகி, கடைசியில் 3 கிலோ உருளைக்கிழங்கு டீலிங்குடன் உடன்பாடு ஏற்படுகிறது. இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. “விவசாயியிடம் உருளைக்கிழங்கு லஞ்சம் கேட்கும் போலீஸ்.” என்று நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த ஆடியோ காவல்துறை வட்டாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள கண்ணுஜ் காவல்துறை, “இது சம்மந்தமாக உதவி ஆய்வாளர் ராம் கிருபாலை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளோம். இதுகுறித்து காவல்துறை துறைரீதியான விசாரணையையும் தொடங்கியுள்ளது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். இதனிடையே ராம் கிருபால் குறிப்பிட்ட உருளைக்கிழங்கில் ஒரு டிவிஸ்ட் உள்ளது. உண்மையில் அவர் உருளைக்கிழங்கை லஞ்சமாக கேட்கவில்லையாம். உருளைக்கிழங்கு என்பது லஞ்சம் தொடர்பாக பயன்படுத்தப்படும் ஒருவித கோட்வேர்ட் என்கின்றனர் காவல்துறையினர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications